Kidny

Kidny

தாய்லாந்தில் பேஸ்புக் முற்றாக தடை செய்யபடுகிறது.



தாய்லாந்து மன்னர் மேலாடை இன்றி ஷொப்பிங் செல்லும் காணொளியொன்று முகநூலில் (Facebook) வெளியிடப்பட்டுள்ளதால் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் இல்லையென்றால் முகநூல் தடை செய்யப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தாய்லாந்து மன்னராக மஹா வாஜிரலோங்நோர்ன் (Maha Vajiralongkorn) என்பவர் கடந்தாண்டு அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.

தாய்லாந்து நாட்டு சட்டப்படி, மன்னரை அவமதிக்கும் வகையில் புகைப்படங்கள் அல்லது காணொளிகளை வெளியிட்டால் அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை மாதம் ஜேர்மனியில் உள்ள முனிச் நகருக்கு சென்றுள்ளார்.

விமான நிலையத்தில் ஒரு பெண்ணுடன் மேலாடை இன்றி நடந்து சென்றுள்ளார். அப்போது, அவர் உடல் முழுவதும் டாட்டூ குத்தப்பட்டிருந்தது இதனை சிலர் காணொளி பதிவு செய்துள்ளனர்.

இந்த காணொளியானது தற்போது சமூக வலைத்தளமான முகநூலில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து தாய்லாந்து அரசு அதிகாரிகள் முகநூல் நிறுவனருக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில், ‘நாளை(புதன்கிழமை) காலை 10 மணிக்கு மேல் இந்த காணொளிகள் முகநூலில் இருந்தால் முகநூல் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து ஆலோசனை நடத்துவோம்.

மன்னரை அவமதிக்கும் இந்த காணொளிகளை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் தாய்லாந்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தாய்லாந்தில் பேஸ்புக் முற்றாக தடை செய்யபடுகிறது. தாய்லாந்தில் பேஸ்புக்  முற்றாக தடை செய்யபடுகிறது. Reviewed by Madawala News on 5/16/2017 04:14:00 PM Rating: 5