Ad Space avaiable

மாட்டு இறைச்சி சாப்பிட்டதாக கூறி முஸ்லீம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த பசு பாதுகாப்பு கும்பல்.


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
பசு பாதுகாப்பு கும்பலால் முஸ்லிம் பெண் கூட்டு வன்புணர்வு
இந்தியாவின் அரியானாவில் மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி பசு பாதுகாப்பு வன்முறை கும்பலால் முஸ்லிம் பெண் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

அரியானாவில் ஒரு மேவாட் கிராமத்தில் ஒரு முஸ்லிம் வீட்டில் புகுந்த ஒரு கும்பல் மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி முஸ்லிம் இளம் பெண் ஒருவரை கூட்டு வன்புணர்வு செய்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த கும்பல் 20 வயது மதிக்கத்தக்க அந்த இளம் பெண்ணையும் 14 வயது மதிக்கத்தக்க அவரது உறவினர் பெண்ணையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
பின்பு வன்புணர்வு செய்துள்ளது.

முன்னதாக அவர்களிடம் மாட்டிறைச்சி சாப்பிட்டீர்களா? என அந்த கும்பல் கேட்டுள்ளது. அதற்கு அவர்கள் இல்லை என்று கூறியும் கேட்காமல் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு கூட்டு வன்புணர்வு செய்துள்ளது.

மேலும் இதனை வெளியில் சொன்னால் மேலும் பாதிக்கப்படுவோம் என்று வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார் அந்த பெண்.
இந்நிலையில் இந்த வன்புணர்வுக்கும், பசு பாதுகாப்புப் படைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பாஜக ஆட்சி அமைந்தது முதல் பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்களும் தலித்களும் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் நடந்து வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்களால் முஸ்லிம்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.
மாட்டு இறைச்சி சாப்பிட்டதாக கூறி முஸ்லீம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த பசு பாதுகாப்பு கும்பல். மாட்டு இறைச்சி சாப்பிட்டதாக கூறி முஸ்லீம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த பசு பாதுகாப்பு கும்பல். Reviewed by Madawala News on 5/07/2017 01:41:00 PM Rating: 5