Ad Space avaiable

பள்ளிவாசல்களை தாக்கி முஸ்லிம்களை மீண்டும் துன்புறுத்தும் செயல்களின் பின்னனியில் ஒரு தீய சக்தி இயங்குகிறது.

மொஹொமட் ஆஸிக்

பள்ளிவாசல்களை தாக்கி முஸ்லிம்களை  மீண்டும் துன்புறுத்தும் செயல்களின் பின்னனியில் ஒரு தீய சக்தி இயங்குவதாக  தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்  தெரிவித்தார்.


சவுதி அரேபியா அரசினால் முஸ்லிம்களின் 

புனித ​நோன்பு காலத்திற்காக அன்பளிப்பு செய்யப்பட்ட பேரீத்தம்பழங்களை அக்குறணை பிரதேச பள்ளிவாசல்களுக்கு பகிர்தளிககும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  அவர் இதனை  தெரிவித்தார்.


அக்குறணை  அஸ்னா மத்திய பள்ளிவாசலில்  இந் நிகழ்வுஇன்று 21 ம் திகதி இடம்  பெற்றது.

இங்கு மேலும்  கருத்து தெரிவித்த அமைச்சர் ஹலீம் இவ்வாறும் கூறினார்.


நாட்டின் சில பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்கள் விசமிகளினால்  தாக்கப்பட்டு முஸ்லிம்கள் துன்புருத்தப்படும் சம்பவங்கள் கடந்த சில தினங்களாக மீண்டும்  இடம் பெற்று வருகின்றது. இத் தீய செயல்கள் பின்னனியில் ஒரு தீய குழு இயங்குவதாக நம்ப முடிகிறது. 


கடந்த மே தினத்திற்கு பின் இச்  செயல் தீவிரமடைந்துள்ளது.

இச் சமபவங்கள் தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வௌ்ளிக் கிழமை தனது அமைச்சில் வைத்து கலந்தாலோசித்தடன் இது தொடர்பாக உடனடியாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து தௌிவு படுத்த தீர்மானித்துள்ளதாகவும அமைச்சர் இங்கு தெரிவித்தார்.


ஜனாதிபதி அவர்கள் செவ்வாய் கிழமை வௌிநாடு செல்ல உள்ளதால் அதற்கு முன் நாளை 22 ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களையும் சந்திக்க  நேரம் ஒதுக்கித் தருமாரு கேடடுள்ளதாகவும் அமைச்சர்  இங்கு தெரிவித்தார்.


எவ்வாறு இருந்த போதும் எதிர்வரும் ரமலான் நோன்பு காலத்தில் முஸ்லிமகள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஜம்மியதுல் உலமா சபையுடன் இனைந்து தத்தமது பள்ளிவாசல்களின்  அறிவுருத்தல்களை கவனத்தில் கொ்ண்டு செயற்ப வேண்டும் என்றும் அமைச்சர் இங்கு தெரிவித்தார். 


தேசிய ரீதியில் இவ்வாரான விடயங்களை தூர எடுத்தச் செல்ல நல்லாட்சி அரசு ஒரு போதும் இடமளிக்காது என்றும் ஜனாதிபதி  பிரதமர் உள்ளிட்ட நல்லாட்சி அரசு இது தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.


2017 05 21  ஆஸிக்

பள்ளிவாசல்களை தாக்கி முஸ்லிம்களை மீண்டும் துன்புறுத்தும் செயல்களின் பின்னனியில் ஒரு தீய சக்தி இயங்குகிறது. பள்ளிவாசல்களை தாக்கி முஸ்லிம்களை  மீண்டும் துன்புறுத்தும் செயல்களின் பின்னனியில் ஒரு தீய சக்தி இயங்குகிறது. Reviewed by Madawala News on 5/22/2017 05:54:00 AM Rating: 5