Kidny

Kidny

எல்லை மீறும் காவித் தீவிரவாத அடாவடித்தனம்.. புதன்கிழமை ஹர்த்தால்!அன்பின் உறவுகளே!

முஸ்லிம்களுக்கு எதிரான காவித் தீவிரவாத அடாவடித்தனம் எல்லை மீறிக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் இதுவரை நாம் ஒரு சமூகமாக எதைச்செய்துள்ளோம் என்று நோக்கினால் முகநூலில் சில பதிவுகளை பகிர்வதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என்பதே உண்மை.
கையாலாகாத அரசியல் தலைமைகளை நம்பிக்கொண்டிருப்பதால் எதையும் சாதிக்க முடியாது என்பதை அனைவரும் நன்கறிவோம்.

இந்நிலையில் ஒட்டுமொத்த சமூகமாக நாம் ஓர்மித்து அரசியல் பிரிவினைகளுக்கு அப்பால் செயல்பட வேண்டிய அவசியத்தை எவரும் உணராமலிருக்க முடியாது.

ஆயின், ஒற்றுமையான சமூகமாக ஒன்றுபட்டு காவித் தீவிரவாதத்துக்கு எதிராக  எமது கைகளை இறைவனை நோக்கி ஏந்துவதே எமது முதலாவது தேர்வாக இருக்க வேண்டும் என்பதில் ஈமான் கொண்ட எவரிடமும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஆகவே எமது கரங்களை இறைவனை நோக்கி ஏந்திப்பிராத்திப்போம்.
முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம் அலைஹிஸ்ஸலாம் கால் பதித்ததாக கருதப்படும் இந்நாட்டில் ஈமான் கொண்டோராகிய நாமும் எமது சந்ததிகளும் கண்ணியமாக வாழவேண்டும்.

எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் காவிக் காடைத்தனங்களை உலக மட்டத்தில் அறியப்படுத்துவதற்கான வழிமுறையையும் நாம் தேர்ந்து கொள்ளவேண்டும்.

இன்று நாம் முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் காவித்தீவிரவாதத்தை உலகறியச்செய்து அழுத்தங்களை தூண்டும் சாத்வீக முயற்சியாக முழு  இலங்கை முஸ்லீம்களும் ஒன்றுபட்டு  ஒரு நாள் ஹர்த்தாலை அனுஷ்டிப்பதை ஆரம்ப முயற்சியாக்குவது சிறப்பான முடிவுகளுக்கு வழிவகுக்கலாம்.

இம்முயற்சிக்கு சமூக ஊடகங்கள் பெரும் உந்துதலாய் செயற்படலாம்.
கட்சி சார் அரசியலுக்கு அப்பால் சமூகத்தின் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் தூய நோக்கத்துடன் ரமளானுக்கு முன் ஒரு நாளில் நடளாவிய ஹர்த்தாலை ஒன்று பட்டு செய்வதால் ஓரளவேனும் ஆட்சியிலிருப்போரையும் சர்வதேசத்தையும் நம் பக்கமாக திரும்பிப்பார்க்கவைக்கலாம்.

ஆர்பாட்டங்கள் ஏதுமற்ற சுய பகிஷ்கரிப்பை செய்து எமது வர்த்தக ஸ்தாபனங்களை மூடி  மற்றுமுண்டான அனைத்து தொழில், கல்வி நடவடிக்கைகளிலிருந்து  ஒரேயொரு நாள் தவிர்ந்திருந்து  ஒரு முயற்சியை செய்வதால் பாரிய நஷ்டமேதும் ஏற்பட்டு விடமாட்டாது.

நமக்காகவும் நம் எதிர்கால சந்ததிகளுக்காகவும் ஒரேயொரு நாளின் தொழிலையும் ஏனைய செயல்பாடுகளையும் பகிஷ்கரிக்காவிட்டால் எமது சமூகத்தின் இருப்புக்காய் வேறு எதைத்தான் எம்மால் செய்யமுடியும்?
உறவுகளே!

எல்லா கருத்து வேற்றுமைகளுக்கும் அப்பால் நின்று எதிர்வரும் புதன்கிழமை 24/05/2017 அன்றை  சகவாழ்வுக்கான நாளாக பிரகடணம் செய்து இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் பூரண ஹர்த்தாலை அனுஷ்டிப்போமாக!
நாளாந்த வருமானத்தை நம்பியிருக்கும் குடும்பங்களுக்கு நம்மில் வசதிபடைத்தோர் அந்நாளில் கைகொடுத்து உதவுவோமாக!

சிறு சிறு அசௌகரியங்களும் பிரதிகூலங்களும் முற்றுமாய் தவிர்ந்ததாக எந்த முன்னெடுப்புகளையும் எவராலும் செய்ய முடியாது.
அந்தந்த பகுதிகளுக்கு பொருத்தமான முறையில் வடிவமைக்கப்பட்ட ஹர்த்தாலை வெற்றிகரமாக செய்தவர்களாக வல்ல இறைவனிடமும் கையேந்திப் பிராத்திப்போமாக!

தமிழ்நாட்டு உறவுகளும் எமக்கான  ஆதரவை வெளிக்காட்டும் முகமாக பொருத்தமான சாத்வீக நடவடிக்கை ஒன்றினூடாக எமது ஹர்தாலுக்கு ஆதரவளித்தால் நன்றிசொல்வோம்.

வெளிநாடுகளிலிருக்கும் உறவுகள் அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் தமது ஆதரவை வெளிக்காட்டும் நடவடிக்கைகளை தேர்ந்து செயற்பட்டால்  கவனயீர்ப்பை மேலும் அதிகரிக்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஹர்த்தால் வெற்றி பெறுவதற்கும் அதனூடாக எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காவிப்பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்படுவதற்கும் இறை உதவி நாடி பிராத்தனைகளிலும் ஈடுபடுவோமாக!

24/05/2017  புதன்கிழமை சகவாழ்வுக்கான தினமாக பிரகடணம் செய்து கவனயீர்ப்பை நாடும்  பூரண ஹர்த்தாலை அனுஷ்டிப்போம் இன்ஷா அழ்ழாஹ்.

சகவாழ்வை விரும்பும் அனைவரிடமும் ஆதரவு வழங்குமாறும் வேண்டுவோமாக!

-வபா பாறுக்-
எல்லை மீறும் காவித் தீவிரவாத அடாவடித்தனம்.. புதன்கிழமை ஹர்த்தால்! எல்லை மீறும் காவித் தீவிரவாத அடாவடித்தனம்.. புதன்கிழமை ஹர்த்தால்! Reviewed by Madawala News on 5/19/2017 12:00:00 PM Rating: 5