tg travels

ஜனாஸா மற்றும் நோயாளர்களை கொண்டுசெல்வதற்கான வாகன முயற்சி இறுதிக் கட்டத்தில்.. தேவை உங்கள் சிறு உதவி.


UCMC நலன்புரி நிலையத்தின் மூலம் நடைமுறை படுத்தப் படவுள்ள  ஜனாஸா மற்றும் நோயாளர்களை கொண்டுசெல்வதற்கான வாகனத்தின் வடிவமைப்பு வேலைகள் பூர்த்தியாகும் நிலையில். ........
               
  மலையக முஸ்லிம் கவுன்சிலின்கிளை நிறுவனமானUCMCநலன்புரி நிலையத்தின் மூலம் நடைமுறை படுத்தப் படவுள்ள  ஜனாஸா மற்றும் நோயாளர்களை கொண்டு செல்வதற்கான வாகனத்தின் வடிவமைப்பு வேலைகள் அல்ஹம்துலில்லாஹ் , அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பூர்த்தியாகும் நிலையில் உள்ளது.

 குறித்த இவ் வாகனம் தூர பிரதேச நோயாளிகளை கொண்டு செல்லும் வகையிலும், ஜனாஸாக்களை கொண்டு செல்லும் வகையிலும், அதேவேளை மாதாந்த இலவச வைத்திய முகாம்களை நடத்த ஏதுவான வகையிலும் வடிவமைக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

நல்லுள்ளம் படைத்த சகோதரர்களின் அன்பளிப்புக்கள், மற்றும் சமூக நிறுவனங்களின் மூலம் வசூலிக்கப் பட்ட நன்கொடைகள் மூலம் கொள்வனவு செய்யப் பட்ட குறித்த இவ்வாகனம்கடந்த சுமார் ஒன்றரை மாதங்களாக அதன் பின்பகுதியை வடிவமைக்கப் பட்டு வந்த நிலையில், மேற்குறித்த பல்தேவைகளுக்கும் பயன் படும் வகையில்  முழுமையாக வடிவமைக்கப் பட மேலும் சுமார் நான்கு இலட்ச ரூபா நிதிதேவையாக உள்ளது.
இம்மையிலும் மறுமையிலும் நிரந்தர நன்மைகளை ஈட்டித் தரக்கூடிய  மேலான  இப் புண்ணியகாரியத்திற்காக அன்பர்கள்,கொடையாளிகள் அன்பளிப்புச் செய்ய விரும்பின் எமது கீழ்வரும் வங்கிக்கணக்கில்வைப்பில் இடவும்.

அல்லது 0777914327
0770881666
077 123 6781 எனும் தொ பே எண்கள்ஊடாக தொடர்பு கொள்ளவும்.
நன்றி வஸ்ஸலாம்.

எம் எச் எம் ரியாஸ் – பிரதான இணைப்பாளர்
UCMC நலன்புரி நிலையம்,
பதுளை

UCMC Janaza volunteers,
A/C #, 109361002616,
Sampth bank – Badulla. 

ஜனாஸா மற்றும் நோயாளர்களை கொண்டுசெல்வதற்கான வாகன முயற்சி இறுதிக் கட்டத்தில்.. தேவை உங்கள் சிறு உதவி.  ஜனாஸா மற்றும் நோயாளர்களை கொண்டுசெல்வதற்கான வாகன முயற்சி இறுதிக் கட்டத்தில்.. தேவை உங்கள் சிறு உதவி. Reviewed by Madawala News on 5/19/2017 06:53:00 AM Rating: 5