Ad Space avaiable

நேற்றிரவு ஹார்வெயார் வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்தது.

பத்தேகம நகரிலுள்ள ஹார்ட்வெயார் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

பத்தேகம பொலிஸார், பிரதேச மக்கள், காலி தீயணைப்பு படையினர் மற்றும் மின்சார சபையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளனர். 

எதுஎவ்வாறு இருப்பினும், தீயினால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதோடு, சேத விபரங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை. 

நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உரிமையாளர் விபரம் இதுவரை அறிய முடியவில்லை. மின் ஒழுக்கு காரணமாக இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நேற்றிரவு ஹார்வெயார் வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்தது. நேற்றிரவு ஹார்வெயார் வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்தது. Reviewed by Madawala News on 5/24/2017 10:22:00 AM Rating: 5