Ad Space avaiable

மக்கள் நடமாடும் பகுதியில் இருந்து பிடிபட்ட சிறுத்தை.


தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் சென். கிளாயர் பகுதியில் உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று இன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளது.

இந்த சிறுத்தை குட்டி குறித்த பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த வேளையில் வாகனமொன்றில் மோதுண்டுள்ளது.

இதனைக் கண்ட பிரதேவாசிகள் உடனடியாக தலவாக்கலை பொலிஸாருக்கு தகவலளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சிறுத்தையை மீட்டு தலவாக்கலை கால்நடை வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளதுடன், இது தொடர்பாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல்களை வழங்கியுள்ளனர்.

இந்த சிறுத்தை குட்டியை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்கவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மைக் காலமாக மக்கள் நடமாடும் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடி வருவதாக தெரிவித்திருந்த நிலையில் இன்று சிறுத்தைக் குட்டி மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் நடமாடும் பகுதியில் இருந்து பிடிபட்ட சிறுத்தை. மக்கள் நடமாடும் பகுதியில் இருந்து பிடிபட்ட சிறுத்தை. Reviewed by Madawala News on 5/17/2017 12:06:00 PM Rating: 5