Ad Space avaiable

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் “இப்றாஹீம் சிறுவர் ஆதரவு இல்லம்” ஆரம்ப நிகழ்வு.



ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் இப்றாஹீம் சிறுவர் ஆதரவு இல்லம் நேற்றைய தினம் (21.05.2017) வரகாபொலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. - அல்ஹம்து லில்லாஹ்.

ஜமாஅத்தின்  துணை செயலாளர் சகோ. ஹிஷாம் மன்சூர் அவர்களின் தலைமை உரையுடன் ஆரம்பமான நிகழ்வை ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. சில்மி ரஷீதி ஒருங்கிணைப்பு செய்தார்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc “சிறுவர் ஆதரவு இல்லத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். ஜமாஅத்தின் செயலாளர் சகோ. ஹிஷாம் MISc அவர்கள் சிறுவர் ஆதரவு இல்லத்தின் செலவீனங்கள் தொடர்பில் விளக்கமளித்ததுடன் கலந்து கொண்ட சகோதரர்கள் ஆதரவு இல்லத்திற்கான தமது பங்களிப்பையும் வழங்கினார்கள். இறுதியாக ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. கபீர் DISc அவர்களின் நன்றியுறையுடன் நிகழ்வு சிறப்பாக நிறைவு செய்யப்பட்டது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் “இப்றாஹீம் சிறுவர் ஆதரவு இல்லம்” ஆரம்ப நிகழ்வு. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் “இப்றாஹீம் சிறுவர் ஆதரவு இல்லம்” ஆரம்ப நிகழ்வு. Reviewed by Madawala News on 5/22/2017 04:58:00 PM Rating: 5