Kidny

Kidny

இறக்காமத்தில் ஒன்று கூடிய முஸ்லிம் கூட்டமைப்பிற்கு எதிராக பகிரங்க அறிக்கை.


-ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

பொத்துவில் பிரதேசத்தினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி.மஜீத், சம்மாந்துறை சேர்ந்த வீ.சி.இஸ்மாயில், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் தவிசாளர் அன்சில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல், முன்னாள் எஸ்.எல்.எம்.சீ. செயலாளர் நாயகம் ஹசன் அலி, பிரதி அமைச்சர் அமீர் அலி, முன்னாள் எச்.எல்.எம்.சீ.தவிசாளர் பசீர் சேகுதாவூத், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் போன்றவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு எதிரான அலையினை கொண்டு வரமுடியும் என்ற சிந்தனையில் களமிறங்கி இருக்கின்றார்கள் என்றால் அதைவிடவும் முட்டாள்தனமான விடயங்கள் எதுவுமே இருக்க முடியாது என நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் தெரிவிக்கின்றார்.

ஆனால் நாபீர் பெளண்டேசன் கூறுகின்ற முஸ்லிம் கூட்டமைப்பானது இவர்களை எல்லாம் ஒன்றிணைத்து உருவாக்குகின்ற கூட்டமைப்பு கிடையாது. அதுமட்டுமல்லாமல் முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியினுடைய தலைமை பொறுப்பினை வகிக்கின்ற தனி நபருக்கு எதிரான கூட்டமைப்பினை பற்றி நாபீர் பெளண்டேசன் ஒரு பொழுதும் கூறியதும் இல்லை. மாறாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் கோட்பாட்டிலிருந்து விளகிச்செல்கின்றது. விளகிச்செல்கின்ற கோட்பாட்டிலிருந்து முஸ்லிம் காங்கிரசினை பாதுகாப்பதற்காகவே நாங்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து தலைமைத்துவத்திற்கு அழுத்தம் கொடுகின்ற பொழுதுதான் முஸ்லிம் காங்கிரஸ் சரியான பாதையில் பயணிக்க தொடங்கும்.

மாறாக முஸ்லிம் காங்கிரசினை அழித்து இன்னுமொரு மாற்றீடான கட்சியினை இந்த மாவட்டத்திற்கு கொண்டு வருவதற்கான தேவைகள் எதுவுமில்லை. மாற்று கட்சி ஒன்று இந்த மாவட்டத்திற்கு தேவைப்பாடாக இருக்கும் என்றால்.? அது நிச்சயமக நாபீர் பெளண்டேசனாகத்தான் இருக்குமே தவிர அது முஸ்லிம் கூட்டமைப்பு அல்ல என்பதனை தான் ஆணித்தரமாக கூறுவதாக மேலும் விரிவாக தனது கருத்தினை தெரிவித்தார் பொறியலாளர் நாபீர்.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து அதிருப்தியுடன் வெளியேறி, வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் அதே கட்சியுடன் முரண்பாட்டு அரசியலினை மேற்கொண்டு வருகின்ற கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த அரசியல்வாதிகள் எலோரும் ஒன்று சேர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்னர் இறக்காமத்தில் முஸ்லிம் கூட்டமைப்பு என்ற ரீதியில் ஒன்று கூடிய விடயம் சம்பந்தமாக பொறியியலாளர் நாபீரின் கருத்தினை வினவிய பொழுதே உதுமான்கண்டு நாபீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகளான ….

பகிரங்காமாக முஸ்லிம் காங்கிரசின் தலைமையினை விமர்சித்து வருகின்ற நீங்கள் இரண்டு தினங்களுக்கு முன்னர் முக்கிய அரசியல்வாதிகளின் பங்குபற்றுதலோடு இறக்காமத்தில் இடம் பெற்ற முஸ்லிம் கூட்டமைப்பு சம்பந்தமான கூட்டத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்.?

பொதுவாகவும் பாகிரங்கமாக க்முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக பல கருத்துக்களை பல இடங்களுக்கும் சென்று தெரிவித்து வரும் ஹசன் அலி ஒரு புறமிருக்க எந்த பொதுக்கூட்டங்களுக்கும் சமூகமளிக்காத முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் குறித்த இறக்காமத்து கூட்டத்தில் கலந்து கொண்டமையினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

இவ்வாறு பல முக்கிய அரசியல் புள்ளிகள் கிழக்கினை பிரதி நிதித்துவப்படுத்தி இறக்காமத்தில் ஒன்று கூடியிருக்கும் இந்த நிலையில் குறித்த கூட்டமைப்பு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு சவாலாகவோ அல்லது அவர்களுடைய எதிர்கால அரசியல் காய் நகர்த்தல்களில் தாக்கம் செலுத்தக்கூடியதாக இருக்கும் என நீங்கள் நினைக்கின்றீர்களா.?

பொதுவாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையினை விமர்சிக்கின்ற நீங்கள் தற்பொழுது முஸ்லிம் காங்கிரசிற்கு எரிராக கூட்டுச்சேர்ந்துள்ள அணியினையும் பகிரங்கமாக விமர்சிக்கின்ற இந்த நிலையிலே எதிர்காலத்தில் நாபீர் பெளண்டேசன் தேர்தலில் களமிறங்கினால் மக்கள் உங்களை ஏற்றுக்கொள்வார்களா.?

கிழகிலே முக்கிய அரசியல் புள்ளியாகவும், சிரேஸ்ட்ட அரசியல் தலைமையாகவும் இருக்கின்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் குறித்த இறக்காமம் கூட்டத்தில் கலந்துகொள்ளாமையினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்.?

குறித்த இறக்காமத்து முஸ்லிம் கூட்டமைப்பு சம்பந்தமாக மக்களுக்கு ஏதாவது கூற விரும்புகின்றீர்களா.?

போன்ற முக்கிய கேள்விகளுக்கு நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் உதுமான்கண்டு நாபீர் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


வீடியோ முஸ்லிம் கூட்டமைப்பு கூட்டம் சம்பந்தமாக நாபீரின் கருத்துகள்:-



இறக்காமத்தில் ஒன்று கூடிய முஸ்லிம் கூட்டமைப்பிற்கு எதிராக பகிரங்க அறிக்கை. இறக்காமத்தில் ஒன்று கூடிய முஸ்லிம் கூட்டமைப்பிற்கு எதிராக பகிரங்க அறிக்கை. Reviewed by Madawala News on 5/22/2017 06:38:00 PM Rating: 5