Ad Space avaiable

இஸ்ரேல் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இலங்கையர்களால் பிரச்சினை.


இஸ்ரேல் நாட்டிற்கு தொழிலுக்காக சென்று உரிய காலம் நிறைவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக அங்கு தங்கியிருந்த சில இலங்கையர்களால் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல கூறியுள்ளார்.

அவ்வாறான நபர்கள் வௌிநாடு செல்வதற்காக ஆவணங்களில் சாட்சி கையொப்பமிட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இஸ்ரேல் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இலங்கையர்களால் பிரச்சினை. இஸ்ரேல் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இலங்கையர்களால்  பிரச்சினை. Reviewed by Madawala News on 5/11/2017 01:21:00 PM Rating: 5