Ad Space avaiable

போலி கல்விச் சான்றிதழ்... இலங்கையர் கட்டாரில் சிறையிலடைக்கப்பட்டார்.

- பைஸான் ஹம்சா-

கத்தாரில் இலங்கையர் ஓருவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அல் ராயா அரப் பத்திரிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் கொழும்பிலுள்ள கத்தார் தூதகரத்துக்குறிய போலி முத்திரைகளை   பதியவைத்து  பல்கலைக்கழக சான்றிதழ் ஓன்றை தயாரித்தார் என்று குற்றம் சுமத்தியே அவருக்கு கத்தார் குற்றவியல் நீதிமன்றம் ஓரு வருட சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

போலி ஆவணத்தை பறிமுதல் செய்து அதனை அழித்துவிடுவதுடன் சிறைத்தண்டனை அனுபவித்த பின் குற்றவாலியை கத்தாரிலிருந்து அவரது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்ற விடயங்களும் நீதிமன்றத் தீர்ப்பில் அடங்குகின்றன.

கல்விச் சான்றிதழோ, திருமண சான்றிதழோ அல்லது எந்த சான்றிதழ்களாக இருந்தாலும்  அவைகள் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி  தயாரிக்கப்பட்டு பார்க்க அசல் சான்றிதழ்கள் போல் விலங்கினாலும்  கத்தார் வெளிவிவகார அமைச்சில் அச்சான்றிதழ்களை அத்தாட்சிப்படுத்தும் போது  போலி ஆவணங்கள் எவை என்பதை அங்குள்ள ஊளியர்கள்  இலகுவாக கண்டுபிடித்துவிடுவார்கள்.

DHARGA TOWN ( FROM QATAR )
போலி கல்விச் சான்றிதழ்... இலங்கையர் கட்டாரில் சிறையிலடைக்கப்பட்டார். போலி கல்விச் சான்றிதழ்... இலங்கையர் கட்டாரில் சிறையிலடைக்கப்பட்டார். Reviewed by Madawala News on 5/08/2017 07:04:00 PM Rating: 5