tg travels

மதுபான உற்பத்திசாலைக்கு எதிராக கல்குடா ஜம்மியத்துல் உலமா சபை நடாத்திய மக்கள் ஆர்ப்பாட்டம்.


-ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

கல்குடா கும்புறுமூலை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவுள்ல மதுபான உற்பத்திகு தேவையான மூலபொருள்களை
உற்பத்தி செய்யும் தொழிற்சாலையினை இடை நிறுத்துமாறு கல்குடா ஜம்மியத்துல் உலமா சபையினர் ஏற்பாடு செய்த மக்கள் அர்ப்பார்ட்டம் நேற்று(19.05.2017) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்னர் ஓட்டமாவடி பிரதான நாற்சந்திக்கு அருகாமையில் ஆரம்பிது வழைச்சேனை பொலீஸ் நிலையம் வரைக்கும் செறு வெற்றிகரமாக இடம் பெற்றது.

கல்குடா பிரதேசத்தில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளிவாயல்களிருந்தும் ஜும்மா தொழுகைக்கு பின்னர் ஒன்று சேர்ந்த மக்கள் வெள்ளத்தோடு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உருப்பினர்களான வியாழேந்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர்கள் கலந்து கொண்டதோடு கல்குடா ஜம்மியத்துல் உலமா சபையினை மதுமான தொழிற்சாலை உடனடியாக இடை நிறுத்துமாறு மக்கள் சார்பாக மகஜர்களை அமைச்சரிடமும், பாரளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோர்களிடம் கையளித்தனர்.

அத்தோடு ஆர்ப்பாட்டம் நடந்த அதே வீதி வழியாக சிறீலங்க தெளஹீத் ஜமாத்தின் கல்குடா கிளையின் ஏற்பாட்டில் தனியான முறையிலு மதுபானசாலைக்கு எதிரான ஆர்ப்பாடம் இடம் பெற்றதனையும் அவதானிக்க குடியதாக இருந்தது. குறித்த இரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் இடம் நிகழ்வுகள் அடங்கிய எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டது.


வீடியோ:-




மதுபான உற்பத்திசாலைக்கு எதிராக கல்குடா ஜம்மியத்துல் உலமா சபை நடாத்திய மக்கள் ஆர்ப்பாட்டம். மதுபான உற்பத்திசாலைக்கு எதிராக கல்குடா ஜம்மியத்துல் உலமா சபை  நடாத்திய  மக்கள் ஆர்ப்பாட்டம். Reviewed by Madawala News on 5/20/2017 09:46:00 PM Rating: 5