tg travels

இந்துக்குழந்தைகளை கடத்தியதாக வதந்தி பரப்பி முஸ்லிம்கள் மீது வன்முறை பலர் மரணம் .


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் குழந்தையை திருடியதாக வதந்தி பரப்பியதில் பல்வேறு இடங்களில் நடந்த வன்முறையில் ஆறு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் ஷோபர்பூர், ஜாம்ஷெட்பூர் உள்ளிட்ட பகுதி கிராமங்களில் குழந்தை திருட்டு நடந்ததாக பரவிய வதந்தியை அடுத்து சங்பரிவார கும்பல் முஸ்லிம்களை குறி வைத்து தாக்கியுள்ளது. அதில் முஹம்மது நயீம் என்ற இளைஞர் வன்முறை கும்பலிடம் தப்பிக்க உயிர் பிச்சை கேட்கும் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. எனினும் ஈவு இரக்கமற்ற அந்த கும்பல் முஹம்மது நயீமை கொலை செய்துவிட்டது.

இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்துள்ளது. போலீஸ் வாகனங்கள் சங்பரிவார வன்முறை கும்பலால் தக்கப் பட்டுள்ளன.

இதற்கிடையே கொல்லப் பட்ட முஹம்மது நயீமுக்கு நிவாரண நிதியாக 2 லட்ச ரூபாய் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப் பட்டுள்ளது. ஆனல் அதனை நயீம் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர். அவர்கள் நீதி வேண்டி போராடி வருகின்றனர்.

ஹல்டிபோகார், ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியதில், நன்கு பேரும் மேலும் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை காவல்துறை யார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்துக்குழந்தைகளை கடத்தியதாக வதந்தி பரப்பி முஸ்லிம்கள் மீது வன்முறை பலர் மரணம் . இந்துக்குழந்தைகளை கடத்தியதாக வதந்தி பரப்பி முஸ்லிம்கள் மீது வன்முறை பலர் மரணம் . Reviewed by Madawala News on 5/21/2017 04:37:00 PM Rating: 5