tg travels

ஹெம்மாதகமை அல் அஸ்ஹர் கல்லூரியின் புதிய அதிபராக K M பவ்மி அவர்கள் கடமையேற்றார் .

இன்று K M  Fபவ்மி (SLPS, 2,B.COM (SP),PGDE.(MERIT),PGDEM (MERIT),M.ED.(Reading), MASTERTEACHER. OUSL)  அவர்கள்  அல்  அஸ்ஹர் கல்லூரியின் அதிபராக கடமையேற்றார்.

K.M FOUMY அவர்கள் தனது பொறுப்பினை தற்காலிக அதிபராக கடமையாற்றி வந்த A . S அஜ்மீர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் SDS, OBA மற்றும் Masjid Federation  அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அல் அஸ்ஹர் கல்லூரி முன்னால் அதிபர் நிஸ்தார் அவர்கள் கடந்த ஆண்டு தனது மேற்படிப்பிற்காக சென்றதினால் எமது கல்லூரியின் அதிபர் பதவி வெற்றிடமானது. அவ்வேளை பாடசாலையின் ஸ்திரத்தன்மையினை பேணும் முகமாக A. S அஜ்மீர் ஆசிரியர் அவர்கள் தற்காலிக அதிபராக கடந்த ஜனவரி (2017.01.05) மாதம் பொறுப்பேற்றார்.

இவ்வேளை எமது பாடசாலைக்கு ஒரு தகுதியான நிலையான அதிபர் ஒருவரது தேவை தொடர்பாக சமூக மட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

கிட்டத்தட்ட 6 மாதங்களாக எமது பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பள்ளிவாயல்கள் சம்மேளனம், சிவில் அமைப்புக்கள் மற்றும் பிரதேச அரசியல் வாதிகளின் முயற்சியால் இன்று எமது பாடசாலைக்கு புதிய அதிபர் ஒன்றினை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.

புதிய அதிபர் K.M FOUMY அவர்களுக்கு   வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தற்காலிக அதிபராக கடமையாற்றிய A . S  அஜ்மீர் அவர்களுக்கு   நன்றியினையும்  தெரிவித்துக் கொள்கின்றது.
ஹெம்மாதகமை அல் அஸ்ஹர் கல்லூரியின் புதிய அதிபராக K M பவ்மி அவர்கள் கடமையேற்றார் . ஹெம்மாதகமை அல் அஸ்ஹர் கல்லூரியின் புதிய அதிபராக K M  பவ்மி அவர்கள் கடமையேற்றார் . Reviewed by Madawala News on 5/16/2017 05:27:00 PM Rating: 5