tg travels

கம்பளை சிறுவன் கடத்தல்... பாலமுனையில் சற்றுமுன்னர் கணவர் மற்றும் மனைவி கைது.


கம்பளை பகுதியில் சிறுவன் ஒருவனை கடத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பெண்கள் இருவர் உட்பட மூவர்  இன்று  விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், சற்றுமுன்னர் காத்தான்குடி போலிஸ் பிரிவு பாலமுனை கிராமத்தில் கணவர் மற்றும் மனைவி கைது செய்யப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அண்மையில், கம்பளை பகுதியைச் சேர்ந்த சுமார் இரண்டு வயதான சிறுவன், அவனது உறவினருடன் சென்ற நிலையில், காணமல் போயிருந்தார்.

இதனையடுத்து, கப்பம் பெறும் நோக்குடன் சிறுவன் கடத்திச் செல்லப்பட்டமை தெரியவந்தது.

பின்னர் குறித்த சிறுவனை மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் வைத்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை, சிறுவனுடன் காணாமல் போனதாக கூறப்பட்ட அவனது மாமாவும் பிடிக்கப்பட்டுள்ளதோடு, அவரே கடத்தலுக்கு திட்டமிட்டுள்ளமையும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதற்கமைய சந்தேகநபர் மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண் மற்றும் அவரது மகளும் கைதுசெய்யப்பட்ட நிலையிலேயே சற்றுமுன்னர் பாலமுனை கிராமத்தில் கணவர் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டனர்.
குழந்தையை கடத்தி சென்ற வேளை தங்க இடம் கொடுத்து கடத்தலுக்கு உதவி புரிந்த குற்றத்திலே இவர்கள் கைதாகி உள்ளனர்.

-அப்துல் கையூம்-
கம்பளை சிறுவன் கடத்தல்... பாலமுனையில் சற்றுமுன்னர் கணவர் மற்றும் மனைவி கைது. கம்பளை சிறுவன் கடத்தல்... பாலமுனையில் சற்றுமுன்னர் கணவர் மற்றும் மனைவி கைது. Reviewed by Madawala News on 5/07/2017 06:51:00 PM Rating: 5