Kidny

Kidny

பைசர் முஸ்தபா, றிஷாட், அசாத் சாலி, மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் உறுதி மொழியையடுத்து மறிச்சுக்கட்டி நீண்ட போராட்டம் முடிவுக்கு வந்தது.


சுஐப் எம் காசிம்-
மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் தமக்குஇழைக்கப்பட்டுள்ள அநீதிகளை போக்கிபிரகடனத்தை
 இரத்துச் செய்ய வேண்டுமெனகடந்த 44 நாட்களாக மறிச்சிக்கட்டியில்கவனயீர்ப்புப் போராட்டத்த மேற்கொண்டபாதிக்கப்பட்ட மக்கள் தமது போராட்டத்தைஇன்று மாலை தற்காலிகமாக (08) இடைநிறுத்திக்கொண்டனர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன்நேற்று காலை (07) நடாத்தியபேச்சுவார்த்தையில் ஏற்பட்ட புரிந்துணர்வின்அடிப்படையில் மாவில்லு வர்த்தமானிபிரகடனத்தில் ஏற்பட்டுள்ள தவறுகளைதிருத்தும் வழிவகைகள் ஏற்பட்டுள்ளதால்போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறுஅமைச்சர்களான றிஷாட் பதியுதீன் பைசர்முஸ்தபா தேசிய ஐக்கிய முன்னணியின்தலைவர் அசாத் சாலி மற்றும் 53இயக்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும்முஸ்லிம் கவ்ன்சில் தலைவர்  ஆகியோர்விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டேஇந்தப் போராட்டம் கைவிடப்பட்டது

அரசியல் பிரமுகர்களான றிஷாட்பைசர்முஸ்தபாஅசாத் சாலி மற்றும் சிவில்அமைப்புகளின் பிரதிநிதிகள் விமானம்மார்க்கமாக களத்துக்குச் சென்றுஜனாதிபதியுடன் முஸ்லிம் சிவில்அமைப்புக்களும் தாங்களும் ஒருமித்துஇணைந்து ஜனாதிபதியுடன்  நடாத்தியபேச்சுவார்த்தையின் விவரங்களைவெளியிட்டதுடன் மேற்கொண்டு தங்களால்முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள்குறித்தும் விபரித்தனர்.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில்திர்வரும் 13ம் திகதி ஜனாதிபதியின்செயலாளருடன் நடாத்தப்படவுள்ளபேச்சுவார்த்தையில் தீர்க்கமான முடிவொன்றுகிடைக்குமென்ற நம்பிக்கையை வெளியிட்டுஅரசியல் முக்கியஸ்தர்களும் சிவில்அமைப்புக்களின் முக்கியஸ்தர்களும்போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மத்தியில்உரையாற்றினர்இந்த திருப்பு முனைநிகழ்வில் மஸ்தான் எம்.பி மக்கள் காங்கிரசின்செயலாளர் சுபைதீன்முஸ்லிம் கவுன்சிலின்உப தலைவர் ஹில்மி அஹமட்சிரேஸ்டசட்டத்தரணி என்.எம்.ஸஹீட் ஆகியோரம்பங்கேற்றிருந்தனர்
கவனயீர்ப்புப் போராட்ட ஏற்பாட்டுக்குழுவின்சார்பில் அலிகான் சரீப்காமில் தௌபீக்மௌலவி ஆகியோரும் உரையாற்றினர்

அமைச்சர் பைசர் முஸ்தபா இங்குகூறியதாவது உங்கள் துன்பங்களையும்துயரங்களையும் அமைச்சர் றிஷாட் வாயிலாகநான் அறிந்து கொண்டவன்நீங்கள் படும்கஷ்டங்களைவிட உங்களுக்காக அவர்படுகின்றபாடு பெரும்பாடாக இருக்கின்றதுஅமைச்சின் பணிகளைவிட உங்களின்பணிகளுக்கு அவர் முன்னுரிமையளித்துவருகின்றார்.
1990ம் ஆண்டு நீங்கள் இந்தப்பிரதேசத்தில்எவ்வாறு வாழ்ந்தீர்களோ அதே உரிமையுடன்உங்களை வாழ அனுமதிக்குமாறுஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்அவர்ஒரு இனவாதியல்ல எனினும்சூழழைப்பாதுகாக்கும் நோக்கில் சில தவறுகள்இடம்பெற்றுள்ளதை சந்திப்பின் போதுஒப்புக்கொண்டார்சரியான பதில்கிடைப்பதற்காகவே மக்கள் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளதாகவும் இது நியாயமானதெனவும்நாங்கள் உணர்த்தினோம் எனவேதான்குழுவொன்றை நியமித்து இதற்கு தீர்வு காணபணித்துள்ளதாக அவர் கூறினார் அதன்வெளிப்பாடே எதிர்வரும் 13ம் திகதிநடைபெறவுள்ள உயர்மட்டக்கூட்டம்

உங்களின் நிலவுரிமைப் போராட்டத்துக்குஉரிய தீர்வு கிடைக்காவிட்டால் நாம்இந்தப்பிரச்சினையை இத்துடன்விட்டுவிடப்போவதில்லைபுலிகளினால்ஏற்கனவே பாதிக்கப்பட்ட உங்களைஅரசாங்கமும் விரட்டியடிக்க இடமளிக்கமாட்டோம் என உறுதியளித்தார்.

தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் அசாத்சாலி இங்கு கூறியதாவது ஜனாதிபதிஅமைத்துள்ள குழுவில் அமைச்சர் றிஷாட்டிடம்ஒரு பிரதிநிதியை ஜனாதிபதி கோரியபோதுறிஷாட் தெளிவான பதில் ஒன்றை அளித்ததுஎன்னை வியப்பில் ஆழ்த்தியது குழுவில் எனதுபிரதிநிதி இடம்பெற்றால் அந்தக்குழுசுயாதீனமான குழுவாக அமையாதுஎனஅமைச்சர் றிஷாட் கூறி இது தொடர்பானவிசாரணைகளை நேர்மையாகவும் நீதியாகவும்முன்னெடுத்து எங்களுக்கு நியாயம்பெற்றுத்தாருங்கள் என்றார்நூங்கள்எந்தப்பிழையும் செய்யவில்லை எனஜனாதிபதியிடம் அவர் உங்கள் சார்பாகமிகத்தெளிவாகத் தெரிவித்தார்.

அமைச்சர் றிஷாட் இங்கு உரையாற்றியபோது,பசியோடும் பட்டினியோடும்தொழிலுக்குச் செல்லாமல் 44 நாட்கள் மண்மீட்புப் போராட்டத்தில் பங்கேற்றஅனைவருக்கும்போராட்டத்துக்குஒத்துழைப்பு நல்கியஅனைத்துக்கட்சிகளையும் சேர்ந்தபாராளுமன்ற உறுப்பினர்கள்மாகாணசபைஉறுப்பினர்கள்பிரதேச சபை உறுப்பினர்கனஜம்மியத்துல்  உலமாமற்றும் முஸ்லிம்கவுன்சில்ஸூரா கவுன்சில் உட்பட்ட சிவில்அமைப்புக்கள் ஊடகவியலாளர்கள்பல்வேறுகிராமங்களில் இருந்தும் இங்கு வந்துஆதரவளித்த  தமிழ்சிங்கள மற்றும் முஸ்லிம்மக்கள் ஆகியோருக்கும் நன்றி தெரிவி;த்தார்அரசின் பலமின்றி மறிச்சிக்கட்டி பிரதேசத்தில்மீள்குடியேற்றத்தை ஆரம்பித்துஇந்தப்பிரதேசத்தை அழகுபடுத்த தாம்மேற்கொண்ட முயற்சிகளை இனவாதிகiளுக்குகாட்டிக்கொடுத்து வில்பத்தைஅழிக்கின்றார்கள் என்ற கருப்பொருளைஅவர்களுக்கு வழங்கி எமது பிரதேசத்தின்மீள்குடியேற்றத்துக்கு தடையாக இருந்த ஒருசிலர் தொடர்பாக தாம்வேதனையடைவதாகவும் அமைச்சர் றிஷாட்பதியுதீன் கூறினார்.


 


பைசர் முஸ்தபா, றிஷாட், அசாத் சாலி, மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் உறுதி மொழியையடுத்து மறிச்சுக்கட்டி நீண்ட போராட்டம் முடிவுக்கு வந்தது. பைசர் முஸ்தபா, றிஷாட், அசாத் சாலி, மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் உறுதி மொழியையடுத்து மறிச்சுக்கட்டி நீண்ட போராட்டம் முடிவுக்கு வந்தது. Reviewed by Madawala News on 5/08/2017 06:17:00 PM Rating: 5