Kidny

Kidny

முந்திச் செல்ல முயன்ற போது அனர்த்தம்.. கனரக வாகனத்துக்கு அடியில் சென்ற மோட்டார் சைக்கிள்.

-பாறுக் ஷிஹான்-

கோப்பாய்ப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று(19) முன்னிரவு 7 மணியளவில் கோப்பாய் சந்திக்கு அருகாமையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பயணித்த கனரக வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதாலேயே விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கனரக வாகனத்தைக் முந்திச் செல்ல முயன்ற போது, மோட்டார் சைக்கிள் செலுத்துனர் தனது கட்டுப்பாட்டை இழந்து கனரக வாகனத்தின் சக்கரங்களுக்குள் அகப்பட்டு பலியாகியுள்ளார்.

இந்த விபத்தில் வல்வெட்டித் துறையைச் சேர்ந்த 63 வயதான ரட்ணகோபால் எனும் வர்த்தகர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முந்திச் செல்ல முயன்ற போது அனர்த்தம்.. கனரக வாகனத்துக்கு அடியில் சென்ற மோட்டார் சைக்கிள்.  முந்திச் செல்ல முயன்ற போது அனர்த்தம்.. கனரக வாகனத்துக்கு அடியில் சென்ற மோட்டார் சைக்கிள். Reviewed by Madawala News on 5/20/2017 11:49:00 AM Rating: 5