Ad Space Available here

மோடி என்பவர் யார்...?தற்போது இந்தியாவின் பிரதமராக இருக்கும் மோடி  12 வருடங்களாக குஜராத் முதலமைச்சராக இருந்தவர், தீவிர இந்துத்துவா கொள்கையை கடைப்பிடிக்கும் இவர்  இந்தியாவின் உயர் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காகவும், தான் இந்துக்களின் பாதுகாவலன் என்ற மாயயை உண்டுபண்ணுவதற்காகவும் முஸ்லிம்களை துண்புருத்தும் ஆயுதத்தை கையில் எடுத்தவர்,இப்போதும் அதனை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டும் வருபவர்.

இவர் கடந்த காலத்தில் குஜராத் முதல்வராக இருந்தபோது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு நிகழ்த்திவிட்டு அந்த பழியை அப்பாவி முஸ்லிம்களின் மீது போட்டு இந்துக்களை ஏவி முஸ்லிம்களை நரவேட்டை ஆடியவர் (இதனை குஜராத் உயர் நீதிமன்றமே உறுதிசெய்துள்ளது.)  அதன் மூலம் நான் இந்துக்களின் கதாநாயகன் என்ற பெயரை ரத்தக்கரை மூலம் எழுதிக்கொண்டவர்.

இவரை இந்தியாவின் உயர் பதவிக்கு கொண்டுவரக் காரணமாக இருந்தது அமெரிக்காதான். அது ஒரு சுவாரஸ்யமான கதை.

குஜராத் கலவரத்தை திட்டமிட்டு நடத்தி முடித்த மோடி  அமெரிக்கா செல்வதற்கு விசா விண்ணப்பம் செய்திருந்தார் (இது திட்டமிட்ட நாடகம்) அந்த விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரித்தது மட்டுமல்ல, மோடி அவர்கள் மிகமோசமான இனவாதி என்றும் கூறியிருந்தது,இவருக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு எந்த தகுதியுமில்லை என்றுகூறி அவருக்கு விசா வழங்க மறுத்துவிட்டதுபோல் நாடகமாடியது அமெரிக்கா.

இந்த செயல்பாடு மோடியின் பெயரை இந்தியாவின் பட்டிதொட்டி எல்லாம் பரவ காரணமாகி விட்டது, இதன் காரணமாக ஒரே நாளில் இந்திய இந்துக்களின் காவலன் மோடி என்ற என்னம் அத்தனை இந்துக்களின் மனதிலும் பதிவாக்கி விட்டது. இதன் காரணமாக அவர் திடீர்ரென இந்தியாவின் குறிப்பாக இந்துக்களின் கதாநாயகனாக பார்க்கப்பட்டார்,இந்த சம்பவத்தை தொடர்ந்தே  பி.ஜே.பியின் பிரதமர் வேட்பாளராக மோடியை அக்கட்சி அறிவித்தது.

இந்த முசியை ஏற்றுக்கொள்ளாத அத்வாணி போன்ற மூத்த பி.ஜே.பி உறுப்பினர்கள் இவருடைய வருகையை கடுமையாக கண்டித்தது மட்டுமல்ல மோடிக்கு பின்னால் மேற்குலகம் உள்ளது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்கள்.ஆனால் மேற்குல சதியுடன் மேற்குலகம் நினைத்ததுபோன்றே மோடி ஆட்சியை கைப்பற்றிக்கொண்டார், அதன் பிற்பாடு பிலேட்டை மாற்றிப்போட்டு மோடிக்கு செங்கம்பல வரவேற்பு கொடுத்தது அமெரிக்கா என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

உலக வரலாற்றில் அமெரிக்கா யாரைப்பார்த்து விமர்சிக்கின்றதோ அவர்கள் எந்தப்பதவியிலிருந்தாலும் கடைசிவரையும் அவர்களை அங்கீகரிக்காது,(சதாம், கடாபி, காஸ்ட்ரோ, மஹிந்த) போன்றவர்களை என்ன பாடுபடுத்தியது அமெரிக்கா என்பதை இந்த உலகமே அறியும், அப்படிப்பட்ட அமெரிக்கா மோடி விடயத்தில் நடந்து கொண்ட முறையைப் சற்று நாம் சிந்தித்து பார்த்தால் இவர்கள் நெருங்கிய கூட்டாளிகள் என்பது எமக்கு புரியும்.

மஹிந்த புலிகளை அடக்கி இலங்கை நாட்டில் அமைதியை ஏற்படுத்திய விடயம் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது, எந்த கெரில்லா போரையும் முற்றாக அழித்த வரலாறு கிடையாது அதனை மஹிந்த சாதித்துக்காட்டியது மட்டுமல்ல,யுத்தம் முடிந்ததன் பிற்பாடு ஒரு வெடிச்சத்தம் கூட இலங்கையில் கேற்காத வகையில் அவர் யுத்தத்தை சீராக முடிவுக்கு கொண்டுவந்திருந்தார்.அப்படி பாதுகாப்பான நாட்டை உருவாக்கிய மஹிந்தவை பாராட்டுவதை விட்டுவிட்டு, இதைவிட மோசமான இனப்படுகொலையைச் செய்த மோடிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன என்றால் இதற்கு பின்னால் இருந்து செயல்படும் சக்தி என்னவென்பதை மக்கள் புரிந்துகொள்ள நேரமெடுக்கும்.

இலங்கையில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த மோடியை அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டது,அதுமட்டுமல்ல இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக மோடியை நன்றாக பயன்படுத்திவருகிறது.அன்று மோடியின் அநியாயங்களை தட்டிக்கேட்ட அமெரிக்காவுக்கு இன்று மோடி செய்யும் அநியாயங்கள் கண்ணுக்கு படவில்லை, காஷ்மீர் மக்களை சர்வதேச சட்டங்களை மீறி கொடூரமாக நடந்துகொள்கின்றது இந்த மோடி அரசு, அதனை சாட்டுக்காவது கண்டிப்பதற்கு அமெரிக்காவுக்கு நேரமில்லை, நேரம் இருக்காதுதான் ஏனென்றால் அங்கே கொல்லப்படுவது முஸ்லிம்கள் என்பதும் இன்னொரு விடயம்.

ஆகவே,இலங்கை முஸ்லிம்களும் யார் சதிகாரன் யார் நண்பன் என்று புரிந்துகொள்ள ஆராய்ந்து பார்க்கவேண்டும்,இலங்கையிலும் அந்த சதி அரங்கேருகிறது,நமது மக்கள் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாமல் உலகத்தின் சதிநாசகார செயல்களுக்குள் மாட்டிக்கொள்ளாமல் இருக்க பழகிக்கொள்ளவேண்டும்.

அப்படி நாம் உணர்ச்சிகளுக்கும், கோசங்களுக்கும் அடிமைப்பட்டோமேயானால் நமது சமூகம் ஆதாள பாதாளத்தில் வீழ்ந்துவிடும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இருந்தாலும் இலங்கை முஸ்லிம் தலைவர்களும் மோடிக்கு மாலை அணிவிக்கின்றார்கள் பரவாயில்லை அவர்கள் சூழ்நிலைக் கைதிகளாக இருக்கின்றார்கள்.ஆனால் இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதும்  இதனை ஏற்றுக்கொள்ளவோ வரவேற்கவோ கூடாது மாறாக இதற்க்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் என்னமாகும்.

எம்.எச்.எம் இப்றாஹிம்
கல்முனை.
மோடி என்பவர் யார்...? மோடி என்பவர் யார்...? Reviewed by Madawala News on 5/13/2017 11:56:00 AM Rating: 5