Kidny

Kidny

ஞானசார தேரர் உள்ளிட்ட கடும்போக்கு அமைப்புகளுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்தார் முஜிபுர் ரஹ்மான்.


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட கடும்போக்கு பௌத்த அமைப்புக்களுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த முறைப்பாட்டை இன்று பிற்பகல் கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் பதிவு செய்த்தார்.

அண்மையில் பொலன்னறுவை பிரதேசத்துக்கு விஜயம் செய்த ஞானசார தேரர் உள்ளிட்ட கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் மீண்டும் நாட்டில் இனவாத்தைத் தூண்டும் வகையில் செயற்படுவதாகவும், உடனடியாக பொலிஸ் மா அதிபர் இந்த விடையத்தை கவனத்தில் எடுத்து, உரிய சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  தெரிவித்தார்.

அதேவேளை, கொஹிலவத்தையில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கும், பொலன்னறுவை பிரதேசத்த்தில் ஞானசார தேரர் ஆற்றிய உரைக்கும், பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்துக்கும் தொடர்புகள் இருப்பதாக தான் சந்தேகிப்பதாகவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் குறிப்பிட்டார்.
ஞானசார தேரர் உள்ளிட்ட கடும்போக்கு அமைப்புகளுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்தார் முஜிபுர் ரஹ்மான். ஞானசார தேரர் உள்ளிட்ட கடும்போக்கு  அமைப்புகளுக்கு எதிராக  பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்தார் முஜிபுர் ரஹ்மான். Reviewed by Madawala News on 5/16/2017 05:50:00 PM Rating: 5