Kidny

Kidny

செல்போன்களால் ஏற்படும் சீரழிவுகள். (Must Read )


எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A.Reading)
மனிதன்அவன் பெற்றுள்ள அறிவை பயன்படுத்திபல வியத்தகு சாதங்களைப் படைத்து
பெரும் சாதனைகள் புரிந்துவருகின்றான். கற்பனையில் கற்பிதம் செய்யமுடியாத பல புதிய புதிய கண்டுபிடிப்புகளை கணக்கின்றிதொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி ஆச்சரியம் ஏற்படுத்தி வருகின்றான். அவை மக்களுக்கு நன்மை தரும் அதேவேளைபெருமளவு தீமையும் தருகிறது.

மனிதனின் இயல்பு தீமைகளின் பால் அதிகம் ஈர்க்கப்படுவதால்அவன்நவீன சாதனைங்களை நன்மைகளைவிடதீமையான காரியங்களுக்கு அதிகம் பயன்படுத்திக்கொள்கிறான். ஆக்க சக்தியாக பரிணமிக்க வேண்டிய அரிய அறிவியல் கண்டுபிடிப்புச் சாதனங்கள்இன்று மிகப் பெரும் அழிவு சக்தியாக மாறி பெரும் நாசத்தையும் சீரழிவையும் எற்படுத்தியுள்ளன.  

இந்த நுாற்றாண்டில் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளில் முக்கிய ஒன்று தான் செல்போன் (Cell Phones) . இலங்கையில் கையடக்கத் தொலைபேசி சேவை 1990ம் ஆண்டின் ஆரம்பத்தில் Celtel நிறுவனம் முதல் தடவையாக அறிமுகம் செய்துவைத்தது. 

அப்போதுபெரும் செல்வந்தர்களும்கோடீஸ்வரர்களும் மாத்திரமே இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகளை விலை கொடுத்து வாங்கிப்பயன்படுத்தினர். ஏழைகள் அதைப்பார்த்து ஏங்க  வேண்டிய நிலை இருந்தது. ஆனால்அன்றை நிலை இன்றில்லை. இன்று இலங்கை குடிமகனிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் உள்ளன. 
celltel அறிமுக நாட்களில்இலங்கையில் தொலைபேசி கருவி ஒன்று 75ஆயிரம் ரூபா முதல் ஓர் இலட்சம் ரூபா வரையில் விலை போனது. அதனால்அன்று கையடக்கத் தொலைபேசியை வாங்கிப் பயன்படுத்தியவர்கள் அதனை கையில் ஏந்தியவாறு பொது இடங்களில்நடமாடுவது ஓர் அந்தஸ்து சின்னமாக விளங்கியது. அது ஒரு செங்கல்லைவிட பெரிதாக இருந்தது. எனினும்அதை ஏந்தியவாறு பெருமையோடு  நடமாடினர்.

இப்போதுபல கையடக்கத் தொலைபேசி நிறுவனங்கள் கையடக்கத் தொலைபேசி சேவையை கொடுப்பதற்கான அனுமதியை அரசாங்கத்திடம் பெற்றுள்ளன. பல கம்பனிகள் பல்வறு வடிவங்களில் மொபைல் போன்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தவுடன் படிப்படியாக கையடக்கத் தொலைபேசிகளின் விலை வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. எனினும், 2ஜி, 3ஜி, 2.5ஜி.எஸ்.எம்., 3.5ஜி.எச்.எஸ். பி.ஏ., 4ஜி/எல்.ரி.ஈ., 5ஜி. ஆகிய சேவைகளைக் கொண்ட கையடக்கத் தொலைபேசி இணைப்புகளை கொண்டிருக்கும் கையடக்கத் தொலைபேசிகள் ஓர் இலட்சம் ரூபாவைவிட அதிக விலை போகிறது.

ஆனால்இன்று நம்நாட்டு சந்தைகளில் சாதாரண மக்கள் வாங்கக்கூடிய 2500 ரூபாவில் இருந்து அவர்களின் பண வசதிக்கு ஏற்றாற்போல் வாங்கக்கூடிய விலைக்கு Smart Phone கள் விற்கப்படுகின்றன. முன்னர் கையடக்கத் தொலைபேசி மூலம் பேசுவதற்கு மாத்திரமே முடிந்தது. இன்று இந்த கையடக்கத் தொலைபேசிகளின் முன்னால் ஒருவர் பேசும் போதுமறுபக்கத்தில் உள்ளவரின் வீடியோவை பார்த்துக் கொண்டே பேச முடியும் .

இலங்கையில் 2000 த்திற்கு முன்னைய கால கட்டத்தில் நிலையான தொலைபேசி (Land lines) இணைப்புகளை எடுப்பதற்கு இருந்த பெரும் கஷ்டத்தின் காரணமாககையடக்கத் தொலைபேசி சேவை ஆரம்பிக்கப்பட்ட போதுஅதிக பிரச்சினையின்றி அவற்றைப் பெறுவதற்கான வாய்ப்பு இருந்த மையினால் இந்த சேவை மகிழ்ச்சியோடு வரவேற்கப்பட்டது.

நாடெங்கிலும் 2005திற்குப் பின்னர் கையடக்கத் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இன்று ஒரு வீட்டில் இரண்டுக்கு அதிகமான கையடக்கத் தொலைபேசி இணைப்புகள் இருக்கின்றன. அதனால்நிலையான தொலைபேசி இணைப்புகளுக்கு இருந்த மவுசு பெருமளவு குறைந்துவிட்டது. கையடக்கத் தொலைபேசிகள் இன்று மனிதனுடைய வாழ்க்கையில் ஒன்றிணைந்து விட்டதனால்அதனை நாம் தூக்கியெறிய முடியாதிருக்கிறது. அதனால்நாம் அவற்றை அவதானமாக பயன்படுத்திட வேண்டும்.இல்லையேல் அதன் விளைவு பாரதுாரமானதாக இருக்கும்.

கையடக்கத் தொலைபேசி இணைப்புகள் ஆரம்பத்தில் மக்களுக்கு மிகவும் சவ்கரியமான முறையில் சேவையை பெற்றுக் கொடுப்பதாக இருந்தாலும்இன்று அதுவொரு மனிதகுலத்திற்கு ஏற்பட்ட ஒரு சாபமாக கூட நன்மக்களால் மக்களால் வெறுக்கப்படும் அளவுக்குஅதனால் ஏற்படும் தீமைகள் அதிகரித்துவருகின்றன.

இன்று கையடக்கத் தொலைபேசிகள் இல்லாமல் யாரும் இல்லை என்று சொல்லும் அளவு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளன. 2011ம் ஆண்டில் இலங்கையில் எல்லாமாக ஒரு கோடியே 80இலட் சத்து 3ஆயிரத்து 447 கையடக்கத் தொலைபேசிகள் இருந்தன. 2012 டிசம்பர் மாத முடிவில் இரண்டு கோடியே 3இலட்சம் கையடக்கத் தொலைபேசிகள் பாவனையில்இருந்தன. நமது நாட்டின் இரண்டு கோடி இலட்சம் மக்கள் தொகைக்கு இந்தளவு கையடக்கத் தொலை பேசிகள் இருப்பதனால் கையடக்கத் தொலைபேசிகளுக்கு மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பை நாம் புரிந்து கொள்ளலாம். அண்மைய கணக்கெடுப்பின்படி இப்பாவனை இன்னும் அதிகரித்துள்ளது.

மிகவும் கவலையை ஏற்படுத்தும் விடயம் இன்று அவை பாடசாலை பிள்ளைகளின் கைகளிலும் இருக்கின்றன. பெற்றோர் பாடசாலையில் கற்கும் தமது மாணவச் செல்வங்களுக்குஸ்மாட் போன்களை வாங்கிக் கொடுப்பதன் மூலம் சமூக சீரழிவுகளுக்கு வழியைத் திறந்து விட்டுள்ளனர் என்ற விமர்சினம் தவிர்க்க முடியாதுள்ளது..

மாணவர்களின் கைகளில் ஸ்மாட் போன்களை பெற்றோர் ஏன் வாங்கிக் கொடுக்கிறார்கள் என்பதற்கான காரணம் என்ன என்பதை அறிய முடியாதிருப்பதாக கல்விச் சமூகத்தினர் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இன்றுகையில் ஸ்மாட்போன்’ இல்லாத மாணவர்களை காண்பது அரிது. ஒரு கையில் பாடப்புத்தகமும்மறுகையில் ஸ்மாட் போனுமாக அவர்கள் வீதியில் நடமாடுவது சாதாரண காட்சியாகிவிட்டது.
இதனால்பாடசாலை பிள்ளைகளின் ஒழுக்கம் சீர்குலைந்து போயுள்ளது. கையடக்கத் தொலைபேசிகள் மூலம் பாலியல் தொடர்புடைய கேவலமான படங்கள்மற்றும் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பார்க்கப்படுகின்றன. இதனால்எங்கள் நாட்டின் இளம் சந்ததியினரின் ஒழுக்கம் பாரிய சீர்குலைவை நோக்கி வேகமாக நகர்கிறது. விலைமதிக்க முடியாத கல்விப் பருவம்ஒழுக்கம் என்பனற்றை மாணவன் இழப்பதற்கு செல்போன்கள் தான் மிக முக்கியமான காரணமாக அமைந்தள்ளதாக உளவியலாளர்கள்தெரிவிக்கின்றனர்.

படிப்பிலும் அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டிய பருவத்தில் இருக்கும் பாடசாலை மாணவ - மாணவிகள் இன்றைக்கு திருமணமானவர்கள் கூட அறிந்திராத அளவிற்கு ஆபாச அந்தரங்கங்களை அறிந்துவைத்திருக்கிறார்கள். புத்தகங்களை சுமந்து செல்லும் இளம் வயது சிறுமிகள் கருவை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. பெற்றோரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை கற்பதற்காக பள்ளிக்குச்செல்லும் சிறுவர்கள் பெற்றோராக மாறிக்கொண்டிருக்கிறார்கள். 

இளம் வயதிலேயே தங்களது பெறுமதிமிக்க எதிர்காலத்தை தொலைபேசிகளுக்குள் தொலைத்துஇலட்சியமற்றவர்களாக இவர்கள் மாறுகிறார்கள். செழித்து வளர வேண்டிய இந்தக் கதிர்கள் சீக்கிரமே சீரழிந்து போவதற்கு செல்போன்கள் முக்கிய காரணியாக இருக்கிறது. 

பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாலிபர்களின் இதை விடவும் மோசமாக உள்ளது. நல்ல பல செய்திகளை பரிமாறிக்கொள்ள வேண்டிய மாணவ சமூகம் ஆபாச SMSகளை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

புடிக்கும் பருவத்திலுள்ள இவர்கள் எத்தகைய உயர்ந்த இலட்சியமும் குறிக்கோளுமின்றிதட்டுத்தடுமாறி, whatsapp,Fb.twitter,viber,line,camera என்று இவைகளில் மூழ்கி வெளிவரமுடியாமல்உளவியல் பாதிப்புக்குள்ளாகிபோதைப் பொருள்களிலும் சினிமாமுறைகேடான பாலியல் இன்பம் என்பவற்றில் தஞ்சமடையும் இழிநிலை ஏற்பட்டுவருகிறது. இதனை மேலும் புரிந்து கொள்ள ஒரு கவிஞனின் பின்வரும் சில வரிகள் துணைபுரிகின்றன.

இளைஞனே! உன்னைப்பற்றி எனக்கு வருகிற தகவல்கள் என் குதூகலத்திற்கே குழி தோண்டுகின்றன.
ஒரு கல்லூரி விடுதிக்கு இரவில் விலை மகளிர் வருவதாய் என் காதுக்கு வருகிறது.
பாவிகளே! அது கல்விச்சாலையாகல்விச்சாலையா?
வேறொரு விடுதியில் ஒரு மாணவியின் கைப்பையில் போதை மாத்திரைகளும்கர்ப்பத்தடை மாத்திரைகளும் சரி விகிதத்தில் இருந்ததாய்ச் சாட்சி கிடைத்திருக்கிறது.
அடி பாவிப் பெண்ணே! நீ மனதை நிரப்ப வந்தாயாமடியை நிரப்ப வந்தாயா?”
(சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன். 2010 பக்கம் : 11)
கையடக்கத் தொலைபேசிகள் ஒரு வகையில் இன்று பாலியல் ரீதியில் விடலைப் பருவத்தைச் சேர்ந்தவர்களையும் மாணவர்களையும் துன்புறுத்தப்படுவதற்கு பிரதான காரணமாகவும் அமைகின்றன. கையடக்கத் தொலைபேசிகள் இளம் சந்ததியினர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதற்கும் உதவியாக அமைகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

விடலைப் பருவத்தைச் சேர்ந்தவர்கள் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் காதல்திருட்டுக் கல்யாணம்கொலைகொள்ளைபோன்ற பல தீய செயற்பாடுகளிலும் சமூக விரோத நடவடிக்கைகளிலும் இறங்குவதற்கு வழியமைத்துள்ளது.

இன்றைய இளைஞர்களில் பலர் இதன் காரணமாக பிற மனிதர்களுடன் நேருக்குநேர் பேசுவதை அதிகளவில் தவிர்த்து வருகின்றனர். Mobile, Tab, Laptop போன்றவைகளுடன்தான் அவர்கள் அதிகம் பேசுகின்றனர்பழகுகின்றனர். மக்களுடனான நேரடித் தொடர்பு இல்லாமல் போன நிலையில்இவ்வாறான கருவியென்பதே அவர்களுக்குத் துணையாகிப்போயுள்ளது. இதனால்மனிதன் இயந்திர நிலைக்குச் சென்றுவிரக்திமனநிலைப் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளான். சிலபோதுபோன்களால் பெறுமதியான பல உயிர்களும் குடிக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தை வடிவமைக்கப்போகும் இளைய தலைமுறையின் கல்வியையும் எதிர்காலத்தையும் சீரழிக்கின்ற கைத்தொலைபேசிப் பாவனையிலிருந்து அவர்களை விலக்கி வைக்கின்ற காரியத்தையே பெற்றோர் இப்போது அவசரமாகச் செய்ய வேண்டியிருக்கின்றது.மாணவர்கள் முகநூலுக்கும் மற்றுமுள்ள சமூக வலைத்தளங்களுக்கும் அடிமையாகிப் போவது ஆரோக்கியமான அறிகுறியல்ல. இது கட்டுப்படுத்தப்பட வேண்டியதாகும்.

கைத்தொலைபேசி மேற்குலக ஆராய்ச்சியாளர்களே கண்டுபிடிக்கப்பட்டது.ஸ்மாட்போன் உட்பட பல நவீன சாதனங்களை அவர்கள் கண்டுபிடித்தனர். ஆனால்ஸ்மாட்போன் போன்ற நவீன சாதனங்களுக்கு மேற்கு நாட்டவர்கள் இன்னுமே நமது நாட்டிலுள்ளளோர்அளவிற்கு அடிமையாகி விடவில்லை. போன் பேசியபடி மேற்கு நாடுகளின் வீதியில் அம்மக்கள் நடமாடுவதை காண முடிவதில்லை. கைத்தொலைபேசியில் உரையாடியபடி சென்றதால்வீதியில் செல்லும் வாகனங்களில் அவர்கள் மோதுண்ட செய்தியும் வெளிவரக் காணவில்லை. தொலைபேசியில் உரையாடியபடி ரயில் பாதையினால் சென்று ரயிலில் மோதுண்டு இறந்த செய்தியும் மேற்கு நாடுகளில் இருந்து வருவதில்லை.

இலங்கை,இந்தியா போன்ற நாடுகளிலேயே இவ்விதமான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. வீதிவிபத்துகள்ரயிலால் மோதுண்டு மரணமடையும் சம்பவங்கள்சமூக சீர்கேடுகள் போன்ற அத்தனை காரியங்களும் இங்குதான் பாரியளவு இடம்பெறுகின்றன. கட்டுப்படுத்த முடியாத இந்த நிலையினால் மிகப் பெருமாதியானஈடு செய்ய முடியாத பல மனித உயிர்களை  நமது நாடு இழந்துள்ளது.

ஸ்மாட்போன்’ மூலம் ஏற்படுகின்ற அவலங்கள் நமது நாட்டில் அண்மைக்காலமாக பெருகித்தான் போய் விட்டன. இன்று இது அனைவரையும் குறிப்பாக இளைய தலைமுறையை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் பயங்கரமான அறைகூவலாக தலையெடுத்துள்ளது. எனவேஇது தொடர்பாக இளைஞர்யுவதிகளை அறிவுறுத்தும் ஆலோசனைகளும்முன்வைக்கப்படுகின்றன. ஆனாலும்அவலங்கள் தொடரவே செய்கின்றன.

ஸ்மாட்போன்’ சீர்கேட்டுக்கான நுழைவாயில் ஆகிவிட்டதால்எமது சமூகம் விழிப்படைய வேண்டியது தருணம் வந்தவிட்டது. எனவேதீமையும்நன்மையும் கலந்த கையடக்கத் தொலைபேசியை நல்ல விடயங்களுக்கு மாத்திரமே பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். 
செல்போன்களால் ஏற்படும் சீரழிவுகள். (Must Read ) செல்போன்களால் ஏற்படும் சீரழிவுகள். (Must Read ) Reviewed by Madawala News on 5/16/2017 10:00:00 AM Rating: 5