tg travels

அரசியல் கூட்டங்களுக்கு அதிகளவானவர்கள் வருவதை வைத்து தேர்தலில் வெற்றி பெறுவதை தீர்மானிக்க முடியாது.


அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையை வைத்து  தேர்தல் பெறுபேறுகள் தொடர்பான தீர்மானத்துக்கு வரமுடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரலகங்வில விலயாய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மஹவலி காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.

கடந்த மே தினக் கூட்டத்துக்கு வந்த நபர்களுடைய தலைகளின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு அரசாங்கத்துக்கு எதிரான பல்வேறு  பிரச்சாரங்களை கூட்டு எதிர்க் கட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர். அடுத்த நாளே அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியும் என்பது போன்ற கதைகளைப் பரப்பி வருகின்றனர்.

நான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட்டங்களுக்கு சென்ற போது, என்னுடைய கூட்டத்தை விடவும் யாருடைய கூட்டத்துக்கு சனக் கூட்டம் அதிகம் காணப்பட்டது என்பது யாரும் அறிந்திருப்பர். இருப்பினும், யாருடைய வாக்குப் பெட்டி நிரம்பிக் காணப்பட்டது என்பதை நாங்கள் தேர்தல் முடிகளின் போது கண்டோம்.

நாட்டு மக்களின் சமூக குழுக்கள், சமய பின்னணி, கலாசார நிலைமை, இன ரீதியான பிரச்சினைகள் என்பவற்றின் அடிப்படையிலேயே தேர்தல் பெட்டிக்குரிய வாக்குகள் விழுகின்றன. இதனால், ஒரு கூட்டத்துக்கு ஆட்களை அதிகம் வரவழைத்து அரசாங்கத்தைப் பிடிக்கப் பார்க்கிறார்ககள் என்றால் அது மிகப் பெரிய நகைச்சுவையாக இருக்கும் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார். DC

அரசியல் கூட்டங்களுக்கு அதிகளவானவர்கள் வருவதை வைத்து தேர்தலில் வெற்றி பெறுவதை தீர்மானிக்க முடியாது. அரசியல் கூட்டங்களுக்கு அதிகளவானவர்கள் வருவதை வைத்து தேர்தலில் வெற்றி பெறுவதை தீர்மானிக்க முடியாது. Reviewed by Madawala News on 5/15/2017 10:03:00 PM Rating: 5