tg travels

இன்று காலை ஜனாதிபதி சம்பூர் .வெருகல் விஜயம் (படங்கள்)

நிலாம்டீன்  விசேட   செய்தி :

கிழக்கு   மாகாண   சுகாதார அமைச்சர் நஸீரின் முயற்சியில் திருகோணமலை, மாவட்டம்   சம்பூர் கிராமத்தில்  இன்று   காலை  வைத்தியசாலை ஜனாதிபதியால்   மைதிரிபாலவினால்  திறந்து வைக்கப்பட்டுள்ளன .

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் முயற்சியில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட திருகோணமலை சம்பூர், பிராந்திய வைத்தியசாலை இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்மந்தன், அமைச்சர் பைஷர் முஸ்தபா, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெணாண்டோ, கிழ்க்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண அமைச்சர்களான தண்டாயுதபானி, ஆரிய கலபதி, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹ்ரூப், முன்னாள் அமைச்சர் டிலான் பெராரா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான நடராஜன், லாஹி, அன்வர் உள்ளிட்டவர்களுடன் பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இவ்வைதியசாலையை திறந்து வைத்த ஜனாதிபதி, வைத்தியசாலைகளை பார்வையிட்டு, அங்குள்ள மக்களிடமும், ஊழியர்களுடன் உரையாடினார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்.  ஏறாவூர்  சுபைர்.சம்மாந்துறை  மன்சூர்  ஆகிய  3  முஸ்லிம்  சுகாதார  அமைச்சர்கள்  கிழக்கில்  இருந்து  விட்டு  போயுள்ளார்கள்.ஆனால்  இந்த  சுகாதார  அமைச்சர்  நசீர்  மட்டுமே  இனப் பாகுபாடு  பார்க்காமல் தமிழ்   மக்களுக்கும்  தனது  சேவையை  விரித்துள்ளார்.இன முரண்பாடு  இல்லாமல்  இவரது  சேவை  தமிழ் மக்களுக்கு  கிடைக்கின்றது .அம்பாறை  திருக்கோவில்  வைத்தியசாலை  தரமுயத்தல்  கடந்த  மாதம்  செய்திருந்தார் .

சம்பூர்  என்பது   30 ஆண்டுகளாக  புலிகளின்  நேரடி கட்டுப்பாடில் திருமலை  மாவட்ட  கட்டளை  தளமாக  இருந்தது .அதனால்  சம்பூர்  மக்கள்  அரச  சேவையை  கண்டதில்லை  பார்த்தில்லை .அதனால்  சம்பூர்  மக்களுக்கு அதிகளவு  சேவை கிடைக்க   வேண்டும்  என்பது எமது  அவா .அந்த  வகையில்  அமைச்சர்  நசீருக்கு   பாராட்டுக்கள் சமர்ப்பணம் ..
 

படமும்  செய்திகளும்  எம்.எம்;.நிலாம்டீன் 


இன்று காலை ஜனாதிபதி சம்பூர் .வெருகல் விஜயம் (படங்கள்)  இன்று காலை ஜனாதிபதி சம்பூர் .வெருகல் விஜயம் (படங்கள்) Reviewed by Madawala News on 5/20/2017 09:38:00 PM Rating: 5