tg travels

நல்லாட்சி அரசு யாரை திருப்திப்படுத்த முனைகிறது..??


- Muja ashraff -

சுதந்திரங்களும் உணர்சிகளும் கடன் வாங்கப்படுவதுமல்ல கடன் கொடுக்கப்படுவதுமல்ல எப்போது அவை இரண்டையும் விட்டுக்கொடுக்கும் சூழ்நிலைக்குள் ஓர் சமூகம் தள்ளப்பட்டு விடுகின்றதோ அப்போதே அந்த சமூகம் தமது தனித்துவத்தையும், இருப்பையும் இழந்து விடுகின்றது.

தேசத்தின் மீதான் காதல் உணர்வுகளால் பிரதிபலிப்படுவதே ஒழிய பேரினவாதம் எதிர்பார்ப்பது போல் வலிந்து நிரூபிக்கப்படுபவையோ வலுக்கட்டாயமாக திணிக்கப்படுபவயையோ அல்ல.

இன்று சிறுபான்மை இனங்கள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக அஹிம்சை வழியை விட்டுவிட்டு ஆயுத வழியினை தேர்ந்தெடுப்பதற்கான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டு வருவதையே அண்மைக்கால நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன.

அன்று இனவாத ரீதியான கருத்துக்களை கூறிவந்த டான் பிரசாத் கைது செய்யப்பட்டவுடன் அதை சாதகமாக பயன்படுத்தி இன ரீதியான முறுகல்களை உருவாக்கி அதில் குளிர்காய முனையும் கடும்போக்குவாதிகளின் சதிமுயற்சிகளை முறியடிக்கும் முன்னெச்சரிக்கை நடவெடிக்கையாக அப்துர் ராசிக்கை கைது செய்த அரசால் ஏன் அதை விட பாரதூரமான நச்சுக்கருத்துக்களை தாம் சார்ந்த சமூகத்தின் பிரதிபழிப்பாக விதைத்து வரும் பெருச்சாழிகளை கைது செய்ய முடியவில்லை என்ற கேள்வியானது

நல்லாட்சி மீதான நம்பகத்தன்மையினை பரவலான அடிப்படையில் கேள்விக்குள்ளாக்கி நிற்பதோடு இதன் மூலம் பேரின சமூகத்தை திருப்திப்படுத்த நினைக்கும் அரசு சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான குரல் வலைகளை நசுக்குகின்றதா என்ற ஐயங்களும் ஏற்படுத்தாமலில்லை.

கடந்த ஆட்சியின் போது இடம்பெற்ற கசப்பான பல சம்பவங்களால் விரக்தியின் உச்ச கட்டத்தில் இருந்த சிறுபான்மை இன மக்களுக்கு ஆட்சியில் ஏற்பட்ட மாற்றமும் அதன் ஆரம்ப கட்ட முன்னடுப்புகளும்  சற்று நம்பிக்கை அளிக்கும் விதமான தோற்றப்பாடுகளை ஏற்படுத்தி இருந்தாலும் அடுத்து வந்த காலப்பகுதிகளில் சற்று அடங்கி வாசித்த இனவாதமும், ஞானம் இல்லா தேரவாதமும் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து இன்று தீவிரமாக இயங்க தொடங்கி விட்டன.

சிறுபான்மை மீதான வசைபாடல்களும், வன்முறையினை தூண்டும் விதமான பேச்சுக்களும், வில்பத்து, மாயக்கல்லி மீதான பகிரங்க அபகரிப்பும், மதஸ்தலங்கள் மீதான தாக்குதல்களும் இதன் அங்கங்களே.

இவை தொடர்பான விடயங்கள் பரவலான அடிப்படையில் தெளிவூட்டப்பட்ட பின்னரும் கூட தமது ஆட்சியினை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமனில் பெரும்பான்மை இனத்தை திருப்திப்படுத்தும்  செயற்பாடுகளில் முன்னிலை வகிப்பது இனவாதமே என்பதால் அவை தொடர்பான விடயங்களை கன்டும் காணாததுபோல்  வேடிக்கை பார்க்கின்றனர் அதன் ஆட்சியாளர்கள்.

ஆட்சிகள் மாறினாலும் ஆட்சியாளர்களின் உள்ளங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இனவாத தீ உள்ளவரை இது போன்ற பல ஞானம் இல்லா தேரர்களின் உருவாக்கமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இதில் மஹிந்த மைத்ரி ஆட்சி என்ற வேறுபாடுகள் கிடையாது.
நல்லாட்சி அரசு யாரை திருப்திப்படுத்த முனைகிறது..?? நல்லாட்சி அரசு யாரை திருப்திப்படுத்த முனைகிறது..?? Reviewed by Madawala News on 5/24/2017 06:28:00 AM Rating: 5