Ad Space avaiable

தோப்பூர் நீணாக்கேணி பிரதேசத்தில் பதற்றநிலை, தாக்குதல்.. பிரதேச முஸ்லிம்கள் இடம்பெயர்வு.



திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் நீணாக்கேணி பிரதேசத்தில் முஸ்லிம்கள் பூர்வீகமாகப் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வசித்து வந்த குடியிருப்புக் காணியைக் கைப்பற்றுவதற்கு முயன்றமையால் நேற்று அங்கு  பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்ட நிலையில் இன்று இரவும் அப்பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

பௌத்த மதகுருவும் பௌத்த இளைஞர் குழுவும் இயந்திரங்களின் உதவியோடு நேற்று அக்காணிக்குள் அத்துமீறி நுழைந்து,
காணியின் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த வேலிகள் இயந்திரங்களால் உடைத்தெறியப்பட மக்களும் ஒன்று திரண்டனர்.

இவ்விரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் இந்த விவகாரத்துக்கு நீதிமன்றத்தை நாடி தீர்வை பெற்றுக்கொள்ளுமாறு சமரசம் செய்ய பதற்ற நிலை தவிர்ந்தது.

அதனை அடுத்து இன்றுகாலை அப்பிரதேச மக்கள் தம் காணிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு வேலிகளை போட்டிருந்தனர். இந்நிலையில் இன்றிரவு அப்பிரதேசத்துக்குள் நுழைந்த சுமார் 200 பேர் காணிகளின் வேலிகளை உடைத்ததுடன், வீடுகளையும் தாக்கி உள்ளனர். இதனால் பிரதேசமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டும் வெளியேறி அருகில் உள்ள பள்ளிவாயல்களிலும் , உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்து உள்ளனர். பிரதேச அரசியல்வாதிகள் களத்துக்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.
தோப்பூர் நீணாக்கேணி பிரதேசத்தில் பதற்றநிலை, தாக்குதல்.. பிரதேச முஸ்லிம்கள் இடம்பெயர்வு. தோப்பூர் நீணாக்கேணி பிரதேசத்தில் பதற்றநிலை, தாக்குதல்.. பிரதேச முஸ்லிம்கள் இடம்பெயர்வு. Reviewed by Madawala News on 5/16/2017 10:03:00 PM Rating: 5