Ad Space avaiable

தமிழ் மொழிக்கான அதிகாரிகள் நியமிக்காது கரையோரம் பேணல் திணைக்களம் இழுத்தடிப்பு சிங்கள அதிகாரிகள் நியமிக்க முஸ்தீபு.


வடக்கு கிழுக்கு  மாகாணத்திற்கான  தனித்தனியே தமிழ் மொழிகளுக்கான  கரையோரம் பேணல் உதவிப் பணிப்பாளர்கள் நியமனத்தில் கடந்த 2 வருடயங்களாக உத்தியோகபூர்வமான வெற்றிடத்திற்கான காடர் செய்யப்பட்டும்  இன்னும் தமிழ் அதிகாரிகள் நியமனம்  செய்யாது  சிங்கள அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாக அறியப்படுகின்றது.

  வடக்கு கிழக்கு  மாகாணத்திற்கான  தமிழ் மொழிக்கான பதவி உயர்வுக்கான பரீட்சைநடைபெற்ற போது அம்பாரை மட்டக்களப்பு மாவட்டத்தில்  இருந்து ஒரு முஸ்லிம் ஒரு தமிழ்  அதிகாரிகள் மட்டுமே குறித்த பரீட்சைக்கு  தோற்றியுள்ளார்கள். தற்போது கல்முனை பிரதேச செயலகத்தில் தனியான அலுவலகத்தில் கடமையாற்றும் முகம்மட் ஜெஸூர்   மற்றும்  மட்டக்களப்பு மாவட்ட அதிகாரியான கோகுலதீபன்  ஆகியோரே குறித்த பரீட்சைக்குத் தோற்றியுள்ள அதிகாரிகளாகும்  தமிழ் மொழிக்கு   வேறு யாரும் தோற்றவில்லை .

கரையோரம்  பேணல்    மற்றும் மூலவள முகாமைத்துவ  திணைகக்ளத்தின்  மாவட்ட இணைப்பாளர்களாக   அம்பாரை  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  பொறுப்பாகவுள்ள    இணைப்காளர்களாக கடமையாற்றி   வரும் இரண்டு அதிகாரிகள் மட்டுமே குறித்த பரீட்சைக்கு  தோற்றியுள்ளார்கள்..

தமிழ் மொழி எழுத வாசிக்க பேச முடியாத  சிங்களம் மட்டுமே பேசத் தெரிந்த அதிகாரியொருவர் குறித்த பரீட்சைப் பேப்பரை திருத்தியுள்ளார்.


தமிழ் மொழி எழுத வாசிக்க பேச முடியாத சிங்களம் மட்டுமே பேசத் தெரிந்த அதிகாரியொருவர் தமிழ் மொழிப் பேப்பரை எப்படித் திருத்த முடியம் கேள்வியுடன்  தமிழ் முஸ்லிம் இணைப்பதிகாரிகள்  இருவரும் நீதீமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்கள் .

  ஆனால் பொதுச் சேவை ஆணைக் குழுவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்க முடியாது என்று  வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

  இந்நிலையில்  தொடர்ந்து  கடந்த 2 வருடங்களாக  வடக்கு கிழக்கு   மாகாணத்திற்கான    உதவிபணிப்பாளர்  பதவிகள் நிரப்பபடாமல் உள்ளது. இதேவேளை  இந்த இரண்டு  அதிகாரிகள்  சிரேஷ்ட  அதிகாரிகள் என்பதால்  இந்தப் பதவிகள் இரண்டிற்கும் இந்த இரண்டு அதிகாரிகள்தான் நியமிக்;கப்பட வேண்டும்  வேறு யாரும் நியமிக்க முடியாது  அதனால்  இந்தப்பதவி வழங்கலில்  கரையோரம் பேணல் திணைக்களம்  தொடர்ந்து இழுத்தடித்து வருகின்றது.

இந்நிலையில்தான்  இரண்டு மாகாணத்திற்கும்  சிரேஷ்ட சிங்கள  அதிகாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்தாக அறிய வருகின்றது.

கரையோரம் பேணல் திணைக்களம் என்பது   ஜனாதிபதி  மைத்திரியின் கீழ்  உள்ளது.இந்த விடயத்தை  நான்  தமிழ் தேசிய  கூட்டமைப்பின்  கனத்திற்கு கொண்டு சென்றுள்ளதால் எதிர்வரும் காலங்களில் இலங்கை நாடாளுமன்றத்தில்  கேள்வி எழுப்புவதற்கான நடவடிக்ககையில் தமிழ்  எம்பி ஒருவர் முன்வந்தள்ளார்.

நல்லாட்சி அரசில் இரண்டு சிறுபான்மை அதிகாரிகள்  தொடர்ந்து  பழிவாங்கப்டுவது  தடுக்கப்பட  வேண்டும்  இந்த விடயத்தில்  தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் இணைந்து செயலல்பட வேண்டும்.இது தமிழ் முஸ்லிம்  உரிமை.இபபடியான  உரிமைகளை விட்டுக் கொடுப்பதன் மூலமாகவே  நாம்  இன்று  பல  புத்தர் சிலகளுக்கு எதிராக முகம் கொடுக்க  வேண்டியுள்ளது.

எம்.எம்.நிலாம்டீன்  -
தமிழ் மொழிக்கான அதிகாரிகள் நியமிக்காது கரையோரம் பேணல் திணைக்களம் இழுத்தடிப்பு சிங்கள அதிகாரிகள் நியமிக்க முஸ்தீபு. தமிழ்  மொழிக்கான  அதிகாரிகள்  நியமிக்காது  கரையோரம் பேணல் திணைக்களம்  இழுத்தடிப்பு சிங்கள அதிகாரிகள் நியமிக்க முஸ்தீபு. Reviewed by Madawala News on 5/15/2017 06:57:00 AM Rating: 5