Kidny

Kidny

சமய நிகழ்வில் கலந்துகொள்ள, பாகிஸ்தான் நோக்கி புறப்­பட்­டது பௌத்த பிக்­குகள் குழு­.


பாகிஸ்­தா­னிய அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரில் சிரேஷ்ட பிக்­குகள், சமய புல­மை­யா­ளர்கள், அர­சாங்க அதி­கா­ரிகள் மற்றும் யாத்­தி­ரீ­கர்கள் உள்­ள­டங்­க­லாக முப்­பத்து நான்கு பேர் அடங்­கிய பௌத்த பிக்­குகள் குழு­வா­னது நேற்று பாகிஸ்தான் நோக்கி புறப்­பட்­டது.

சங்­கைக்­கு­ரிய கனு­முல்­தெ­னியே சாந்­த­வி­மல மஹா­நா­யக்க தேரரின் தலை­மையின் கீழ் இக்­குழு பாகிஸ்­தா­னிய அர­சாங்­கத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள இரண்­டா­வது வெசாக் நிகழ்­வு­களில் பங்­கு­பற்­ற­வுள்­ளது.

பாகிஸ்­தானின் இரண்­டா­வது வெசாக் நிகழ்­வுகள் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த தக் ஷில்லா நக­ரில் கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமாகி நாளை 24 ஆம் திகதி வரை இடம்­பெ­ற­வுள்­ளன.

பாகிஸ்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் காரி­யா­ல­யத்தின் தற்­கா­லிக உயர்ஸ்­தா­னிகர் வைத்­தியர்  சர்ப்ராஸ் அஹமட் கான் சிப்ரா மற்றும் உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்தின் அதி­கா­ரி­க­ளினால் இலங்­கையின் பௌத்த பிக்­குகள் குழு­வா­னது வழி­ய­னுப்பி வைக்­கப்­பட்­டது.

பாகிஸ்தான் முஸ்­லிம்­களை பெரும்­பான்­மை­யாக கொண்ட நாடாக இருந்­த­போ­திலும், இரண்­டா­வது முறையும் வெற்­றி­க­ர­மாக வெசாக் விழா­வினை கொண்­டா­டு­வ­துடன் பல நாடுகள் இவ்­வி­ழாவில் பங்­கு­பற்­று­வ­தற்­காக அழைக்­கப்­பட்­டுள்­ள­தாக பாகிஸ்தான் தூத­ரகம்  தெரி­வித்­துள்­ளது.

வெசாக் நிகழ்­வு­க­ளுக்கு அப்பால், இக்­கு­ழு­வா­னது பௌத்த ஆன்­மீக முக்­கி­யத்­துவ­மிக்க புரா­தன பிர­தே­சங்­க­ளான  தர்­ம­ரா­ஜிக ஸ்துபா, சிர்காப், தக்­ஹி-­பஹி மற்றும் த­க் ஷில்லா அருங்­காட்­சி­யகம் என்­ப­வற்றுக்கு விஜயம் மேற்­கொள்­ள­வுள்­ளது.

பாகிஸ்தான் 22 நூற்­றாண்­டு­க­ளுக்கும் மேலாக பௌத்தம் மற்றும் கந்­தாரா நாக­ரி­கத்தின் முக்­கிய இட­மாக காணப்­ப­டு­கின்­றது. பாகிஸ்­தா­னிய பூமியில் பௌத்தம் உய­ரிய கட்­ட­டக்­கலை, நினை­வுச்­சின்­னங்கள் மற்றும் சிறந்த கலை மர­பு­களை விட்­டுச்­சென்­றுள்­ளது. பல நூற்­றாண்­டுகள் கடந்­துள்­ள­போ­திலும், கந்­தாரா அதன்  உய­ரிய கைவி­னைகள் மற்றும் கலை பாரம்பரியங்களை பாதுகாத்து வருகின்றது. கந்தாரா நாகரிகமானது கி.மு. 5ஆம் நூற்றாண்டு தொடக்கம் 6ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் தென்-மேற்கு பாகிஸ்தானில் வளர்ச்சிபெற்றது  என்றும் பாகிஸ்தான் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
சமய நிகழ்வில் கலந்துகொள்ள, பாகிஸ்தான் நோக்கி புறப்­பட்­டது பௌத்த பிக்­குகள் குழு­. சமய நிகழ்வில் கலந்துகொள்ள,  பாகிஸ்தான் நோக்கி புறப்­பட்­டது பௌத்த பிக்­குகள் குழு­. Reviewed by Madawala News on 5/23/2017 12:40:00 PM Rating: 5