Kidny

Kidny

இளம் மனைவியை தீ மூட்டிக் கொள்ள முயற்சித்த கணவன் தலைமறைவு. #புத்தளம் பிரதேசத்தில் சம்பவம்.



புத்தளம் நள்ளாந்தளுவ பிரதேசத்தில், தனது மனைவியை தீ மூட்டிக் கொலை செய்ய முற்பட்ட சந்தேக நபரான, கணவன், தலைமறைவாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, இன்று (07) தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நள்ளாந்தளுவ பிரதேசத்தில், இளம் தம்பதிகளுக்கிடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த வௌ்ளிக்கிழமை (05), மனைவியை தீ மூட்டிக் கொலை செய்வதற்கு கணவர் முயற்சித்துள்ளார்.

கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான 19 வயது மனைவி, புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற போதிலும் அவருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரிகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த  பெண்ணுக்கு, இரண்டு வயது குழந்தையொன்று இருப்பதாக தெரிவிக்கப்படுன்றது.
இளம் மனைவியை தீ மூட்டிக் கொள்ள முயற்சித்த கணவன் தலைமறைவு. #புத்தளம் பிரதேசத்தில் சம்பவம். இளம் மனைவியை தீ மூட்டிக் கொள்ள முயற்சித்த கணவன்  தலைமறைவு.  #புத்தளம் பிரதேசத்தில் சம்பவம். Reviewed by Madawala News on 5/07/2017 06:37:00 PM Rating: 5