Kidny

Kidny

மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் ரத்து செய்யப்படுகிறது.



இந்நாட்டின் மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களில் சிலவற்றை ரத்துச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த வகையில், மல்வது, அஸ்கிரிய, ராமஞ்ஞா மற்றும் அமரபுர ஆகிய மகாநாயக்க பிரிவுகளின் தலைமைத் தேரர்கள் தவிர, ஏனைய தலைமைத் தேரர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள்  செல்லுபடியற்றதாக்கப்படவுள்ளது.

இவ்வாறு இராஜதந்திர கடவுச் சீட்டு ரத்து செய்யப்படும் தலைமை தேரர்களின் பெயர்ப்பட்டியல் தயார்படுத்தப்பட்டு வருவதாக இது தொடர்பில் குடிவரவு குடியகல்வுப் பிரிவு நிருவாகி எம்.என். ரணசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் ரத்து செய்யப்படுகிறது. மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் ரத்து செய்யப்படுகிறது. Reviewed by Madawala News on 5/16/2017 09:09:00 AM Rating: 5