tg travels

இலங்கை முஸ்லிம்கள் மீதான அத்துமீறல்களுக்கு கட்டாரில் உள்ள இரத்த உறவுகளின் எழுச்சி.


இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் இனவாத செயற்பாடுகளை அரபு நாடுகளின் கவனத்திற்கும், வெளிநாட்டு ஊடகங்களுக்கும் கொண்டு செல்லும் விதமாக, கட்டாரில் உள்ள முஸ்லிம் நாடுகளின் தூதரகங்களுக்கும், கத்தார் அரசுக்கும், கத்தாரில் உள்ள இலங்கை முஸ்லிம்களின் கையெழுத்தோடு கூடிய மகஜர் ஒன்றை கையளிக்கும் செயற்பாடு ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த விடயம் சம்பந்தமான கலந்துரையாடல்களுக்கு கத்தாரில் உள்ள ஒவ்வொரு புத்திஜீவிகளதும் ஆலோசனை, சட்ட நுணுக்கங்கள் தேவைப்படுகின்றது.

இறைவனது ஏற்பாட்டால் எமது முயற்சியின் விளைவாக இலங்கை அரசுக்கு சிறு அழுத்தமேனும் வழங்கப்பட்டாலும் அது எமது முயற்சியின் வெற்றியே.

குறித்த விடயம் தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல்களுக்கு இறைவனுக்காக சிரமம் பாராது தங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி தொடர்பு கொள்ளுங்கள்.
முதற்கட்ட கலந்துரையாடல்களுக்கு கீழுள்ள வட்ஸ்அப் நம்பருக்கு பின்வரும் தகவல்களை அனுப்புங்கள்.

பெயர்,
இலங்கையில் ஊரின் பெயர்,
தொழில்.

முகம்மட் அஸ்லம் 00974 50190136 
இலங்கை முஸ்லிம்கள் மீதான அத்துமீறல்களுக்கு கட்டாரில் உள்ள இரத்த உறவுகளின் எழுச்சி. இலங்கை முஸ்லிம்கள் மீதான அத்துமீறல்களுக்கு கட்டாரில் உள்ள இரத்த உறவுகளின் எழுச்சி. Reviewed by Madawala News on 5/21/2017 05:20:00 PM Rating: 5