Kidny

Kidny

இலங்கையர் விக்ரமசிங்கவுக்கு இங்கிலாந்தில் இனவெறி ரீதியான தாக்குதல்.

 
பிரித்தானியாவில் இனவெறி ரீதியான வார்த்தை பிரயோகங்களுக்கு முகங்கொடுத்த இலங்கையர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Welwyn Garden City வீதியில் வைத்து இனவெறியை தூண்டும் வகையிலான வார்த்தை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தனது முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

40 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் பிறந்த எரந்த விக்ரமசிங்க என்பவரே இந்த முறைப்பாட்டினை செய்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் அவர், 2000 ஆம் ஆண்டு பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளார். இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய பெண் ஒருவரை திருமணம் செய்து Welwyn Garden City பகுதியில் குடியேறியுள்ளார்.

கடந்த வாரம், லண்டனில் பணி புரியும் வழியில் ரயில் நிலைய பாதையிலுள்ள Hydeway முடிவில் பயணித்த போது, அங்கு ஒரு வெள்ளைகார நபரை அவர் எதிர் கொண்டுள்ளார்.

குறித்த நபர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி “நீ இங்கு வர நிறைய இருக்கிறது” என அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

“நிறைய இருக்கிறது” என்ற வார்த்தையின் ஊடாக என்ன கூறுவதற்கு அந்த நபர் முற்பட்டார் என சந்தேகம் எழுந்துள்ளதாக விக்ரமசிங்க அந்த நாட்டு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் கவலை மற்றும் புண்படுத்தும் வகையில் உள்ளது. நாங்கள் புதிய வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். எனினும் இந்தப் பகுதியில் எங்கள் குழந்தைகளை வளர்ப்பது பாதுகாப்பானதா என்பது குறித்து யோசித்து வருகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

"நாங்கள் இருவரும் பிரித்தானியர்கள், மிகவும் திறமையான தொழிலை கொண்டுள்ளோம். வேலை தேடுவதற்காகவும் உலகில் வேறு இடத்தினை தேடுவதற்காகவும் போராட மாட்டோம். ஆனால் நாம் பிரித்தானியாவை நேசிக்கிறோம், இங்கு குறைபாடுகள் இருந்தாலும், வாழ்வதற்கு இங்கிலாந்து இன்னும் சிறந்த இடங்களில் ஒன்றாகவே நாங்கள் கருதுகிறோம். "

இந்த இனவாத செயற்பாடு தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தவர், கடந்த வருடம் பிரெக்ச்சிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் இனவாத துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வேர்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் எனினும் நான் பிரித்தானியராக இருப்பது குறித்து பெருமையடைகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Welwyn Garden City என்ற பகுதியில் மனைவி ரூத்துடன் விக்ரமசிங்க வாழ்ந்து வருகின்றார்.
இலங்கையர் விக்ரமசிங்கவுக்கு இங்கிலாந்தில் இனவெறி ரீதியான தாக்குதல். இலங்கையர் விக்ரமசிங்கவுக்கு இங்கிலாந்தில் இனவெறி ரீதியான தாக்குதல். Reviewed by Madawala News on 5/20/2017 10:22:00 AM Rating: 5