tg travels

நாம் அனைவரும் ஒன்றிணைந்து இனவாத்தை கண்டிப்போம். இனவாதத்துக்கு இடமளிக்க முடியாது .


எந்தவொரு இனத்தவரோ மதத்தவரோ நாட்டின் சட்டங்களை மீற இடமளிக்க முடியாது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாதத்தை எழுச்சியடைய வைக்க முயற்சித்த சில குழுக்கள், அது தோல்வி கண்டமையால் மதவாதத்தை முன்னிருந்தி நாட்டை குழப்ப முற்படுவதாகவும் இனவாத்தை தோற்றுவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், அதற்கு இடமளிக்க முடியாது எனவும் நாம் அணைவரும் ஒன்றிணைந்து அதனை கண்டிக்க வேண்டும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அத்துடன், மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை இலங்கைக்கு கிடைக்கப் பெறாது போனதாகவும், அதன் பயனை பங்களாதேஷ் கைப்பற்றியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தற்போது ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை இலங்கைக்கு மீள வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ரணில், அதன் பயனாக வர்த்தகங்களை மேற்கொண்டு வேகமாக வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஏதேனும் அச்சுறுத்தல் இருப்பின் அந்த அச்சுறுத்தல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். நாடு தற்போது அபிவிருத்தி குறித்து முன்னோக்கி செல்கின்றது. அதற்கு சர்வதேசத்தின் ஆதரவையும் பெற்றுள்ளது.

மேலும், இலங்கையில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க இந்தியா முதலீடு செய்ய தயாராக இருப்பதாகவும், ஜப்பான் உதவி செய்ய முன்னோக்கி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து இனவாத்தை கண்டிப்போம். இனவாதத்துக்கு இடமளிக்க முடியாது . நாம் அனைவரும் ஒன்றிணைந்து  இனவாத்தை கண்டிப்போம். இனவாதத்துக்கு இடமளிக்க முடியாது . Reviewed by Madawala News on 5/23/2017 06:40:00 PM Rating: 5