tg travels

குருநாகல் மாவட்டப் பள்ளிவாயில்களுக்கு ரமழான் மாதம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை.


குருநாகல் மல்லவப்பிடிய ஜும்ஆ பள்ளிவாயில் இனந்தெரியாத நபர்களால்
நள்ளிரவு பெட்ரல் குண்டுதாக்குதல் இடம்பெற்றதை தொடர்ந்து பிரதேசத்தில்
பதற்றநிலை தோன்றியுள்ளது.

இதை தொடர்ந்து இன்று காலை குறித்த பள்ளிவாயிலுக்கு நேரடியாக விஜயம் செய்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் றிஸ்வி ஜவ்ஹர்ஷா பள்ளிவாயில் நிர்வாகிகளுடன் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் பிரதான வீதியூடாக அமைந்துள்ள பள்ளிவாயில்களுக்கான பாதுகாப்பு வழங்கும் வகையில் ரமழான் மாதம் முழுவதும் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்ற நடவடிக்கையை ஸ்ரீ.ல.மு.கா. தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹகீம் அவர்களை தொடர்பு கொண்டு வேண்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குருநாகல் மாவட்டப் பள்ளிவாயில்களுக்கு ரமழான் மாதம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை. குருநாகல் மாவட்டப் பள்ளிவாயில்களுக்கு ரமழான் மாதம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை. Reviewed by Madawala News on 5/22/2017 06:52:00 AM Rating: 5