Ad Space avaiable

முதலமைச்சரை புகழ்ந்து கணக்கறிஞர் றியாழினை படித்த வெங்காயம் என விமர்சித்த சாட்டோ வை.எல்.மன்சூர்.


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கல்குடா தொகுதியில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் வேட்பாளராக களமிறங்கியவரும், கல்குடா தொகுதி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளருமான கணக்கறிஞர் றியாழினை படித்த வெங்காயம் என கிழக்கின் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து கொண்ட முக்கிய நிகழ்வொன்றில் சாட்டோ வை.எல்.மன்சூர் பகிரங்கமாக விமர்சித்த நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (12.05.2017) பாசிக்குடாவில் இடம் பெற்றது.

கல்குடா தொகுதி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரசின் அமைப்பாளர் லியாப்தீனின் தலைமையில் வாழைச்சேனை பாசிக்குடா உல்லாச கோட்டலில் இடம் பெற்ற இளைஞர் காங்கிரஸ் புனரமைப்பு கூட்டத்திலே மேற்கண்டவாறு சமூக ஆர்வலரும் கல்குடா தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான சாட்டோ.வை.எல்.மன்சூர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஷிப்லி பாரூக், புல்மோட்டை அன்வர், முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளை கே.பி.எஸ்.ஹமீட், ஆகியோர்கள் அதிதீகளாக கலந்து கொண்ட குறித்த நிகழ்வில் மேலும் தனது கருத்தினை தெரிவித்த சாட்டோ வை.எல்.மன்சூர்… 1994ம் ஆண்டு தொடக்கம் 2000ம் ஆண்டு காலப்பகுதியில் கல்குடா பிரதேசத்தினை எடுத்துக்கொண்டால் ஹிஸ்புல்லாவினை எதிர்த்து கல்குடாவில் எஸ்.ஐ.மொஹம்மட் தம்பி களமிறக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டும் மொஹம்மட் தம்பி கல்குடாவினை விட்டு ஒதுங்கி செல்லவில்லை என்பது முக்கிய விடயமாகும்.
ஆனால் மறுபக்கத்தில் மொஹம்மட் தம்பி கல்குடா தொகுதியின் அமைப்பாளராக இருந்து கொண்டு பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் அதிகாரங்களை வைத்து பல அபிவிருத்திகளை கல்குடா பிரதேசத்தில் மேற்கொண்டிருந்தார். அன்று ஹிஸ்புல்லாவினால் கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் மெற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் இன்றும் நினைவு கூறப்பட்டு ஹிஸ்புல்லாவினை வாழ்த்தும் வரலாறுகளாகவே இருகின்றது. அத்தோடு மொஹம்மட் தம்பி முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அமைப்பாளராக இருந்த அனைவருடனும் நெருங்கிய அரசியல் நட்பினை பேணி கல்குடாவிற்கு ஏதாவது தன்னால் முடியுமான அபிவிருத்திகளை ஒத்துளைப்புடன் சாதுரியமாக நடாத்தியதும் இன்று வரைக்கும் போராளிகளால் நினைவு கூறப்படும் விடயமாக இருக்கின்றது.
அது மட்டுமல்லாமல் மர்ஹும் மொகதீன் அப்துர் காதர் சுகவீனமுற்றிருந்த காலப்பகுதியான 2002ம் ஆண்டு வழைச்சேனை பத்தி எரிந்த சந்தர்ப்பத்தில் கல்குடாவின் அமைப்பாளராக இருந்த எம்.ரி.எம்.பரீட்  அப்பொழுது பிரதி அமைச்சராக இருந்த பசீர் சேகுதாவுத்துடன் ஒத்துளைத்து செயற்பட்டு மாவட்டத்தில் இருந்த அரசியல் அதிகரம் பொருந்திய அரசியல் தலைமைகளுடன் முரண்பட்டுகொள்ளாமல் பல கோடி ரூபாய்களை 2002ம் ஆண்டு தமிழ் முஸ்லிம் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டு சமூகங்களுக்கும் பகிர்ந்தளித்தமை ஒரு வரலாற்று பதிவாக இன்றும் பார்க்கப்படுகின்றது.
அது போலவே இன்று மாவட்டத்தில் மட்டுமல்லாது முழு கிழக்கு மாகாணத்துக்குமே அதிகாரம் பொருந்திய அரசியல் தலைமையாக இருக்கும் ஹாபிஸ் நசீர் அஹமட்டுடன் இணைந்து கல்குடாவிற்கு தேவையாக இருக்கின்ற அபிவிருத்திகளை முன்னெடுப்பதில் தற்பொழுது கல்குடாவின் அமைப்பாளராக இருக்கும் கணக்கறிஞர் றியாழ் முரண்பாட்டு அரசியலினை கையில் எடுத்து செயற்படுவதினால் கல்குடாவிற்கு எதையும் சரியாக செய்யமுடியாத மற்றும் கையாலாகாத முஸ்லிம் காங்கிரசின் கல்குடா அமைப்பாளராக இருப்பது வேதனை அளிக்க கூடிய விடயமாகவும், படித்தும் வெங்காயம் மாதிரி நடந்து கொள்ளும் செயற்பாட்டாளராக காணக்கூடியதாகவும் இருக்கின்றது.
இன்று எமக்கிருக்கிருக்கின்ற கிழக்கின் முதலமைச்சரானவர் அன்று தேசிய, சர்வதேச தகவல் தரவுகளுடன் நகர்ந்த ஒரு பெறுமதிக்க வளவாளராக காணப்பட்டப்பட்டார். அதற்கு சான்றாக 2002ம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கையினை தொடர்ந்து விடுதலை புலிகளுக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் ஒப்பந்தம் நடந்த திகதி அன்று தென்கிழக்கு பல்கலை கழகத்தில் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவத்தின் தலைமையில் இடம் பெற்ற இனப்பிரச்சனை தொடர்பில் இலங்கை முஸ்லிம்களின் வகிபாகம் என்ன என்ற தலைப்பில் தேசிய முஸ்லிம் சமூகத்தின் பங்குபற்றுதலோடு நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் உரையாற்றியது முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப இடத்தில் மீண்டும் தடம்பதிப்பதற்கு வழிகோலிய உரையாக இன்றும் பார்க்கப்படுகின்றது.

அத்தோடு சமகால முஸ்லிம் இளைஞர் சமூகம் எதிர் நோக்குகின்ற சவால்களுக்கு தீர்வுகளை பெற்றுகொடுக்க கூடிய கிழக்கில் உள்ள ஒரே ஒரு முஸ்லிம் அரசியல் தலைமை என எதற்கும் பயப்படாமல் கூற முடியும் என்றால் அது முதலமைச்சர் நசீர் அஹமட்டை மட்டுமே கூற முடியும். இளைஞர்களின் உளவியலோடு முதலமைச்சர் பின்னிப்பிணைந்த ஒருவராக இருக்கின்றார். அத்தோடு இளைஞர்களின் உளவியலோடு சம்மந்தப்படுத்தி இளைஞர்களை மாற்றத்தை நோக்கிய நகர்தலோடு முன்னேற்ற வேண்டும் என்பதில் முதலைமைச்சர் முன்னோக்கி பயணிக்க கூடியவாராக இருக்கின்றார்.

முஸ்லிம் காங்கிரசினுடைய  மங்கிப்போன புரட்சியின் மேல் மீண்டும் ஒரு காலை வெளிச்சம் என்ற பார்வையில் இளைஞர் சமூகத்தின் முன்னேற்றகரமான வாழ்விற்கு நாங்கள் எல்லோரும் எமது முதலமைச்சரின் கரங்களை பலப்படுத்துவன் தேவையில் இருந்து கொண்டிருக்கின்றோம். அல்லது அவர் இளைஞர்கள் விடயத்தில் எடுக்கின்ற தீர்க்கமான முடிவுகளுக்கு ஒத்துளைத்து எமது கல்குடாவில் மங்கிப்போன புரட்சியிலிருந்து காலை வெளிச்சத்தினை உருவாக்க வேண்டிய கட்டாய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம். அதனால்தான் எமது கல்குடாவின் அமைப்பாளராக இருக்கின்ற கணக்கறிஞர் றியாழ் முதலமைச்சருடன் ஒத்துளைத்து மங்கிப்போயிருக்கும் கல்குடாவின் எழுச்சியினை கட்டியெழுப்புப்வதில் பங்காற்ற வேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

ஆகவேதான் கணக்கறிஞர் றியாழ் கல்குடாவின் கடந்த கால பாராளுமன்ற வேட்பாளர் என்ற வகையிலும், கல்குடாவின் அமைப்பாளர் என்ற வகையிலும் மாவட்டத்தில் அரசியல் அதிகாரத்துடன் இருக்கின்றவர்களுடன் ஒத்துளைத்து கல்குடாவினை அபிவிருத்திகளை நோக்கி கொண்டு செல்ல முடியாத அறிவிருந்து செயற்பாடற்றவராக இருப்பதுதான் எங்களுக்கு கவலை தரக்கூடிய விடயமாக இருக்கின்றது.

ஆகவே கணக்கறிஞர் றியாழ் எதிர்வருகின்ற காலங்களில் குறுகிய அரசியல் வாத, பிரதிவாதங்களை எல்லாம் புறம்தள்ளி வைத்துவிட்டு களத்தில் இறங்கி செயற்படுவதோடு, எந்த அரசியல் அனுபவமும் இல்லாத அவருடைய நண்பர்களின் ஆலோசனைகளை தூக்கி எறிந்து விட்டு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுடன் இணைந்து கல்குடாவில் மேற்கொள்ள வேண்டிய பாரிய அபிவிருத்திகளையும், முஸ்லிம் காங்கிரசின் உள்ளக, வெளியக கட்டமைப்புக்களையும் முன்னோகி நகர்த்த வேண்டும் என்பதே கல்குடா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

குறித்த இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் அதீதிகள் மற்றும் சாட்டோ வை.எல்.மன்சூரின் விரிவானதும், விளக்கங்கள் உடனான உரையின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


வீடியோ விமர்சனத்தின் காணொளி :
முதலமைச்சரை புகழ்ந்து கணக்கறிஞர் றியாழினை படித்த வெங்காயம் என விமர்சித்த சாட்டோ வை.எல்.மன்சூர். முதலமைச்சரை புகழ்ந்து கணக்கறிஞர் றியாழினை படித்த வெங்காயம் என விமர்சித்த சாட்டோ வை.எல்.மன்சூர். Reviewed by Madawala News on 5/13/2017 03:04:00 PM Rating: 5