tg travels

கம்பளை குழந்தை சல்மான் கடத்தல் விவகாரம். வேன் சிக்கியது. சந்தேக நபர்களின் பெயர் விபரமும் வெளியானது.



நாட்டில் கடும் பரபரப்பை ஏற்படுத்திய கம்பளையைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் கடத்தல்; தொடர்பாக முன்னாள் ராசீக்குழு உறுப்பினர்கள் இருவர் உட்பட மேலும் நான்குபேரை காத்தான்குடி பொலிசார் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் இன்று திங்கட்கிழமையும் கைது செய்துள்ளனர்.

பாலமுனையைச் சேர்ந்த அப்துல் பசீர் முஹம்மது ராபீக் காத்தான்குடி இப்றாஹீம் மன்சில் வீதியைச் சேர்ந்த அப்துல்காதர் முஹம்மது ரிசான் ஆகிய முன்னாள் சாசீக் குழுவைச் சேர்ந்தவர்களும் புதிய பாலமுனை வீதி மஞ்சந்தொடுவாயைச் சேர்ந்த ஜூனைத் முஹம்மது சர்ஜூன்இமீள்குடியேற்ற கிராமம் பூநொச்சிமுனையைச் சேர்ந்த சின்னலெப்பை முஹம்மது ரிபான் ஆகியோரே காத்தான்குடி பொலிசாராரினால் கைது செய்யப்பட்டவர்களாவர்.

இதேவேளை கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்ட மற்றொரு சந்தேக நபரான அசாம் என்பவை காத்தான்குடி பொலிசார் தேடி வருகின்றனர்.

குறித்த கடத்தில் சம்பவத்தின்போது கம்பளையிலிருந்து சிறுவனைக் கடத்திவந்த காத்தான்குடியைச் சேர்ந்த வேனையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.குறித்த வானின் சாரதி பொலிஸ் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யபபட்டவர்களை இன்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமனறத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எம்.கணேசராசா உத்தரவிட்டார்.

கைதானவர்களில் இருவர் முன்னரும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புள்ளவர்கள் எனத்தெரியவருகிறது.காத்தான்குடி பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

-அப்துல் கையூம்-
கம்பளை குழந்தை சல்மான் கடத்தல் விவகாரம். வேன் சிக்கியது. சந்தேக நபர்களின் பெயர் விபரமும் வெளியானது. கம்பளை குழந்தை சல்மான் கடத்தல் விவகாரம். வேன்  சிக்கியது. சந்தேக நபர்களின் பெயர் விபரமும் வெளியானது. Reviewed by Madawala News on 5/08/2017 05:36:00 PM Rating: 5