tg travels

தமிழ் பேசும் இளைஞர்கள் யுவதிகள் பொலிஸில் இணைய முன் வாருங்கள். பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன .


-பாறுக் ஷிஹான்-

யாழ்.மாவட்டத்தில் பெண் பொலிசார் மிக குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ள  யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன  குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு தமிழ் பேசும்  இளைஞர்கள்  யுவதிகள் முன்வர  வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திலும் குறிப்பாக யாழ்.மாவட்டத்திலும் தமிழ் பேசும் பொலிசார் மிக குறைவாக காணப்படுகின்றனர். அதிலும் தமிழ் பேசும் பெண் பொலிசாரின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே காணப்படுகிறது. இதனால் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை முறைப்பாட்டை பதிவு செய்வதற்கு பற்றாக்குறைவாகவே தொடர்ந்து  உள்ளது.

தமிழ் பொலிசாரை இணைப்பதற்கு பலதடவை நேர்முக தேர்வுகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பொலிசில் இணைவது என்பது மிக குறைவாகவே உள்ளது. எனவே வடக்கில் தமிழ் பொலிசாரின் பற்றாக்குறையை நீக்குவதற்கு தமிழ பேசும் இளைஞர் யுவதிகள் முன்வரல் வேண்டும்.

தற்போதும் தமிழ் பொலிசாரை இணைத்துக் கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கான தகுதிகள் விண்ணப்பங்களை பொலிஸ் நிலையங்களிலும் புத்தக நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும். கா.பொ.தர சாதாரண பரீட்சையில் சித்தியெய்த எவரும் இதற்கு விண்ணப் பிக்கலாம். விண்ணப்ப முடிவு திகதி யூன் 03 ஆம் திகதியாகும். ஆகவே அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்
தமிழ் பேசும் இளைஞர்கள் யுவதிகள் பொலிஸில் இணைய முன் வாருங்கள். பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன . தமிழ் பேசும் இளைஞர்கள் யுவதிகள் பொலிஸில் இணைய முன் வாருங்கள். பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன . Reviewed by Madawala News on 5/11/2017 01:12:00 PM Rating: 5