tg travels

சமூக வலைத்தளங்களில் நன்மையென எண்ணி பாவமான காரியங்களையே இளைஞர்கள் பரப்புகின்றனர்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

இன்று நம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துபவர்களாக இருக்கின்றார்கள். அதில் பதிவிடப்படுகின்ற அனைத்துத் தகவல்களையும் அதன் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை போன்றவற்றைக் கவனத்தற்கொள்ளாமல் அதனை அப்படியே மற்றவர்களுக்கும் பரப்பி விடுகிறார்கள் என உண்மை உதய இஸ்லாமிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி குறிப்பிட்டார்.

ஒரு மனிதன் கேள்விப்பட்டதையெல்லாம் பிறருக்கு அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்கு போதுமான சான்றாகும் என்கின்ற நபி மொழியைச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு மனிதன் கேட்பதையெல்லாம் பேசக்கூடாது. பார்ப்பதையெல்லாம் பரப்பக்கூடாது.

இதை இன்றைய இளைஞர்கள் சர்வ சாதாரணமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். நான் மார்க்கத்துக்கு முரணாக நடக்கும் இளைஞர்களைப் பற்றி கூறவில்லை. மார்க்கத்தில் ஆர்வமாகவுள்ள, பிரசாரப்பணியல் தங்களை அர்ப்பணித்துள்ள இளைஞர்களைப்பற்றிக் கூறுகின்றேன்.

அவர்கள் பல விடயங்களை நன்மை என நினைத்துக்கொண்டு செய்கின்றார்கள். அதனால் அதில் தீமைகள் இருக்கிறது என்று அவர்கள் நினைப்பதில்லையென நேற்று 12.05.2017ம் திகதி அக்கரைப்பற்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு பேசுகையில்,

சமூக வலைத்தளங்கள் என்பது முஸ்லீம்களுக்கு மாத்திரம் சொந்தாமானதல்ல. மாற்று மதத்தவர்களும் அதில் இணைந்து கொண்டிருகிறார்கள். குடும்பங்களுக்குள், நம் சமூகத்துக்கு மத்யில் நடக்கும் நிகழ்வுகளை, பிரச்சினைகளை படம் பிடித்துப்பதிவிடும் காட்சிகளை அவர்களும் பார்ப்பார்கள். அதனால் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தைத் தவறுதலாகப் புரிந்து கொள்ளக்கூடும். இந்த விடயத்தில் நாம் மிக நிதானமாக, அவதானமாக இருக்க வேண்டும்.

சமூக வலையத்தளப் பாவனையானது ஆண், பெண் மற்றும் சிறுவர்களையும் கூட விட்டு வைக்கவில்லை. இதன் பாவனையூடக இன்று பலர் குர்ஆனையும் விட்டு தூரமாகிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. இப்பாவனையை தவறான பாவனையிலிருந்து தவிர்ந்து இஸ்லாமிய பிரசாரப் பணியில் மிக நிதானமாகப் பயன்படுத்த வேண்டுமெனத் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் நன்மையென எண்ணி பாவமான காரியங்களையே இளைஞர்கள் பரப்புகின்றனர். சமூக வலைத்தளங்களில் நன்மையென எண்ணி பாவமான காரியங்களையே இளைஞர்கள் பரப்புகின்றனர். Reviewed by Madawala News on 5/13/2017 02:17:00 PM Rating: 5