Kidny

Kidny

விளையும் பயிர்கள்.......!! (MUST READ)


“அவகூட பேசினிங்களா டாக்டர்?

“உங்களை பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க”

“எங்களுக்கு மூன்று குழந்தைங்க டாக்டர், இவ எனக்கு ரெண்டாவது மகள். மூத்த மகள் மெடிக்கல் பேகல்ட்டில ரெண்டாவது வருஷம் படிக்கா. இவட தம்பி இந்த வருஷம் O/L எக்ஸாம் செய்றாரு. அவங்க ரெண்டு பெரும் நல்ல கெட்டிகாரங்க, ஆனா இவைக்கு சரியா படிக்க முடியல்ல, பத்தாம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டா. “

“உங்க மனைவி என்ன பண்ணுறாங்க?”

“மனைவியும் நானும் ரெண்டு பேரும் வேலைக்கு போறோம்”

"இப்போ இவைக்கு இருபது வயசு ஆகுது சின்ன வயசில இருந்தே யார் கூடயும் சரியா பேசவோ பழகவோ மாட்டா, என்கூடவே பேசமாட்டா.
எங்களுக்கு எல்லா வசதியும் இருக்குது, தொடர்ந்து படிக்க வைக்க எவ்வளோவோ முயட்சி எடுத்தும் எங்களால முடியல. அதனாலதான் கல்யாணத்தை முடித்து கொடுக்கலாம் என்று முடிவு செஞ்சோம் , அதுக்கும் சம்மதிப்பதாக தெரியவில்லை.

என் நண்பர் ஒருவர்தான் உங்களை சந்த்தித்து கவுன்சிலிங் கொடுத்து பார்க்க சொன்னார் அதான் உங்ககிட்ட கூட்டிவந்தேன் மேடம்"

“உங்க வீடு கட்டும் போது உங்க மகளுக்கு எத்தனை வயசு என்று யாபகம் உள்ளதா?”

“அப்போ ஓரு எட்டு வயசு இருக்கும்”
“ அப்போ நீங்க ரெண்டு பெரும் வேலைக்கு போனா குழந்தைங்கள யார் பார்த்துக்குவா?”

“வேலக்காரி வச்சிருந்தோம், அவங்கதான் குழந்தைங்களை பார்த்துக்குவாங்க”

“உங்க மகள் கூட கதைச்சேன், மனம் விட்டு எல்லாம் பேசினா”
“என்ன சொல்றா மேடம்?”

"உங்க வீடு கட்டும்போது அங்கே வேலை செய்த ஒருத்தன் உங்க மகளை தொடர்ச்சியா பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்திருக்கான். இத வெளியே சொன்னா தம்பியை கொலை செய்வேன் என்றும் அச்சுறுத்தியுள்ளான் .அந்த மனப்பாதிப்புலதான் படிப்புல கவனம் செலுத்த முடியாமல் போய் உள்ளதுடன், எல்லா ஆண்களையும் வெறுக்க ஆரம்பித்துள்ளா. ஆண் ஆசிரியர்கள் பாடம் நடாத்தும்போதும் அவர்கள் மேல் உள்ள பயத்தில் பாடத்தின்மேல் கவனம் செலுத்த முடியாமல் போய் உள்ளது”

"....................."
"என்ன மௌனமா இருக்கீங்க?"
"என்னால நம்ம முடியல மேடம்....!"
"நீங்க நம்பித்தான் ஆகனும் . உங்க இருபது வயசு மகள் தனக்கு எட்டு வயசுல நடந்த அநியாயத்த மனசுல போட்டு புதைத்து மன அழுத்தத்தால எவனோ ஒரு அயாக்கியன் செஞ்ச அநியாயத்தால தனது வளமான வாழ்க்கைய தொலைச்சிட்டு நிக்கிறா."
"..................."
"கொஞ்ச நாளைக்கு உங்க கல்யாண கதையை நிறுத்தி வைங்க, இல்லனா அவ வேறு விபரீதமான முடிவுகளுக்கும் வரலாம்"

"சரி மேடம். இப்ப நாங்க என்ன பன்னனும்?"

"தொடர்நது கவுன்சிலிங் கொடுத்து அவட மனச மாத்த முயட்சி செய்வோம்."
"அப்படியே செய்வோம் மேடம். தவறு எங்க மேலதான்னு இப்பதான் எனக்கு புரியுது. எங்க குழந்தைக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பை கொடுக்க நாங்க தவறிட்டம். அதற்கான தீர்வுகளையும் நாங்கதான் இனி தேடனும்."

“சிறுவர் பாலியல் துஷ்ப்பிரயோகம் என்பது, பிள்ளையின் உடலுக்கு செய்யும் அத்துமீறள் மட்டுமல்ல, அது பிள்ளையின் ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கும், வாழும் உரிமைக்கும், அதன் நம்பிக்கைக்கும் இழைக்கும் அநியாயமும், அத்துமீறளுமாகும்”

எமது குழந்தைகள்தான் எமது எதிர்கால உண்மையான செல்வங்கள்

நிஃமத். எம். பைஸல்
விளையும் பயிர்கள்.......!! (MUST READ) விளையும் பயிர்கள்.......!! (MUST READ) Reviewed by Madawala News on 5/16/2017 06:30:00 PM Rating: 5