Ad Space avaiable

நண்பர்களுடன் நீராடச்சென்ற முகம்மத் சர்பான் நீரில் மூழ்கி வபாத்.


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மட்கோ கடற்கரையில் நண்பர்களுடன் நீராடச்சென்ற 16 வயது இளைஞன் நீரில் மூழ்கி இன்று (11) 11.30மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை.மட்கோ ,முஹம்மதிய்யா நகரைச்சேர்ந்த  டி.எப்.சர்பான் (16வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த இளைஞன் தனது நண்பர்களுடன் நீராடச்சென்ற போது நண்பரொருவர் நீரில் மூழ்கியுள்ளார்.இவரை காப்பாற்றிய வேளை அவர் தப்பியதுடன் இவர் நீரில் மூழ்கியதாகவும் தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பர்களுடன் நீராடச்சென்ற முகம்மத் சர்பான் நீரில் மூழ்கி வபாத். நண்பர்களுடன் நீராடச்சென்ற முகம்மத் சர்பான் நீரில் மூழ்கி வபாத். Reviewed by Madawala News on 5/11/2017 12:43:00 PM Rating: 5