Ad Space avaiable

SLBC UK யின் ஏற்பாட்டில் UK இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் மாநாடு..

தகவல்:அமானுல்லா கமால்தீன்
கடந்த வார இறுதியில் ஐக்கிய இராச்சிய இலங்கை முஸ்லிம் நிறுவனங்களின் இரண்டு நாள் மாநாடு SLBC UK என்ற போல்டனிலுள்ள இலங்கை முஸ்லிம் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படடிருந்தது.

அதில் ஐக்கிய இராச்சியத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து ஐக்கிய இராச்சிய இலங்கை முஸ்லிம் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் முதல் நாளில் போல்டனில் ஐந்து தசாப்தங்களாக சேவை செய்து வரும் முன்னணியில் நிற்கும் நிறுவனங்களைச் சாரந்த முக்கிய தலைவர்கள் தங்களது முன்னேற்ற இரகசியங்களின் பின்னணிகளைப் பகிர்ந்து கொண்டதுடன் மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த அஷ் ஷெய்க் அப்துல் காலிக் மவ்லவி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். 

அத்துடன் அன்று மாலை மாநாட்டில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள் போல்டனிலுள்ள முக்கிய கல்வி நிறுவனங்களைப் பார்வையிடுவதற்கான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்துது
மாநாட்டின் இரண்டாவது நாள் ஐக்கிய இராச்சிய இலங்கை முஸ்லிம் நிறுவனங்களைப் பிரதிநிதிப்படுத்தும் முக்கியஸ்தர்கள் உரையாற்றினார்கள். 

அத்துடன் நோன்பு பிடிப்தறகான ஸஹர் ஆரம்ப நேரம, நோன்பு, ஈத் நாட்கள் போன்றவற்றின் பிறை கணக்கு போன்ற விடயங்கள பற்றி ஐக்கிய இராச்சிய இலங்கை முஸ்லிம்கள ஒன்றுபட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று பேசப்பட்டது.
ளுடுடீஊ ருமு நிறுவனத்தின் இந்த ஏற்பாடு மிகவும் பிரயோசனமுள்ளதாக  அமைந்தது. மாநாட்டில் கலந்து கொண்ட சமூக தலைவர்களுக்கு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் நமது எதிர்கால சந்ததிகளை  எவ்வாறு வழி நடாத்தி வெற்றி பெறும் சமூகத்தை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்த்தப்பட்டது. 

எமது சமூகத்தை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்ல ஒரு சிறந்த வழிகாட்டலாக இம்மாநாடு அமைந்துது.
SLBC UK யின் ஏற்பாட்டில் UK இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் மாநாடு.. SLBC UK யின் ஏற்பாட்டில் UK இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் மாநாடு..  Reviewed by Madawala News on 5/10/2017 09:34:00 PM Rating: 5