Ad Space Available here

கடைக்குள் புகுந்த டொல்பின்.. பள்ளத்தில் பாய்ந்த கார்.


வீதியில் கினிகத்தேனை ரம்பதெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் டால்பின் ரக  வேன், கார் மற்றும் கடை ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து மஸ்கெலியா சென்ற வான் ஒன்று கினிகத்தேனை ரம்பதெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுடன் மோதி அருகில் இருந்த கடைக்குள் புகுந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் விபத்துக்குள்ளாகிய கார் சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளதுடன், வான் மற்றும் வியாபார கடையும் சேதமடைந்துள்ளது.
கடைக்குள் புகுந்த டொல்பின்.. பள்ளத்தில் பாய்ந்த கார். கடைக்குள் புகுந்த டொல்பின்.. பள்ளத்தில் பாய்ந்த கார். Reviewed by Madawala News on 5/13/2017 11:22:00 AM Rating: 5