Kidny

Kidny

விமானத்தின் ஊடாக நடக்கும் கள்ளக் கடத்தல்களுக்கு விமான நிலைய ஊழியர்கள் ஒத்துழைப்பு? சிக்கிய நபர் தகவல்.


விமானத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு வியாபார நடவடிக்கைகளுக்கு விமான நிலைய ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றனரா என்பது குறித்து ஆராய விமான நிலைய சுங்கப் பிரிவினர் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அண்மையில் தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, சுங்க பிரதிப் பணிப்பாளர் பராகிரம பஸ்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மலேஷியாவில் இருந்து இலங்கைக்கு வந்த விமானத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் வசம் இருந்து சுமார் மூன்றரை கோடி  ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டது.

இதற்கமைய, இந்த வியாபாரம் குறித்து விமான நிலைய சுஙகப் பிரிவினர், சம்பந்தப்பட்ட விமான நிலையத்தின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பராகிரம பஸ்நாயக்க கூறியுள்ளார்.
விமானத்தின் ஊடாக நடக்கும் கள்ளக் கடத்தல்களுக்கு விமான நிலைய ஊழியர்கள் ஒத்துழைப்பு? சிக்கிய நபர் தகவல். விமானத்தின் ஊடாக நடக்கும் கள்ளக் கடத்தல்களுக்கு விமான நிலைய ஊழியர்கள் ஒத்துழைப்பு? சிக்கிய நபர் தகவல். Reviewed by Madawala News on 5/21/2017 01:05:00 PM Rating: 5