Ad Space avaiable

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறப்போவதாக அறிவித்த இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ மகிந்தவுடன் சிறு சந்திப்பு...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹவுக்கும் இடையில் மிககுறுகிய நேர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கும் இடையில், முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளதாக வெளியான செய்தியை அடுத்தே இந்த செய்தி வெளிவந்துள்ளது.

    ராஜபக்ஷவின் இளம் சகோதரி மரணமடைந்ததையடுத்து இடம்பெற்ற ஏழாம்நாள் மதவழிபாடுகளில் பங்கேற்பதற்கே, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ, அங்கு வருகைதந்திருந்தார்.

 அவர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் நீண்டநேரம் கலந்துரையாடிக் கொண்டிருந்துள்ளார். அவர், அவ்வீட்டிலிருந்து நீண்ட நேரத்துக்கு பின்னரே வெளியேறியுள்ளார் என்று அறியமுடிகின்றது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து எந்தநேரத்திலும் வெளியேறத் தயாராக இருப்பதாக, சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்திருந்ததும், சாதாரண அலுவலகப் பணியாளருக்கு உள்ள அதிகாரம் கூட தனக்கு இல்லை என்றும், கட்சித் தலைவரின் செயற்பாடு காரணமாக தமக்கு அரசியல் வாழ்க்கையில் வெறுப்புணர்பு ஏற்பட்டுள்ளதாகவும் கொலன்னாவயில், நேற்று (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறப்போவதாக அறிவித்த இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ மகிந்தவுடன் சிறு சந்திப்பு... ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறப்போவதாக அறிவித்த  இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ மகிந்தவுடன் சிறு  சந்திப்பு... Reviewed by Madawala News on 5/15/2017 06:13:00 AM Rating: 5