tg travels

இளைஞனின் விசித்திர விபச்சார மோசடி... ( என்னவெல்லாம் பண்றாங்க நம்ம நாட்டுல)


நீண்டமகாலமாக விசித்திர மோசடியில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டள்ளார்.

யுவதிகளை ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று அங்கு பல நாட்கள் தங்கியிருந்து பின்னர் ஹோட்டல் அறைகளுக்கான கட்டணத்தை செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ள நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் 3 வருடங்கள் அளவில் இந்த மோசடியை மேற்கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு சந்தேக நபர், கிருலப்பனை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 6 நாட்களுக்காக இரண்டு அறைகளை பெற்று கொண்டுள்ளார்.

இதன்போது அவருடன் மேலும் ஒரு யுவதியும், வேறு ஒரு ஜோடியும் அந்த அறைகளில் தங்கியிருந்துள்ளனர்.

பின்னர் 5 நாட்கள் அந்த ஹோட்டலில் தங்கி அங்கு அனைத்து வசதிகளையும் பெற்று கொண்டுள்ள நிலையில், 2 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் இது தொடர்பில் குறித்த ஹோட்டலின் உரிமையாளரால் கிருலப்பனை காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மேற்கொண்ட விசாரணைக்கு அமைய தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த பிரதான சந்தேக நபரான 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணந்துறை ஹோட்டல் ஒன்றில் குறித்த சந்தேக நபர் யுவதியொருவருடன் தங்கியுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், ஹோட்டல்களுக்கு சென்று போலி அடையாள அட்டைகளை முன்வைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர் உள்ளிட்ட குழுவினர் பல சந்தர்ப்பங்களில் பாணந்துறை, மொரட்டுவை, கிருலப்பனை, மஹரகம, கெஹூவல பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்களில் தங்கியிருந்து பின்னர் பணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இளைஞனின் விசித்திர விபச்சார மோசடி... ( என்னவெல்லாம் பண்றாங்க நம்ம நாட்டுல) இளைஞனின் விசித்திர விபச்சார மோசடி... ( என்னவெல்லாம் பண்றாங்க நம்ம நாட்டுல) Reviewed by Madawala News on 5/16/2017 04:29:00 PM Rating: 5