Ad Space avaiable

நேற்றைய தோப்பூர் செல்வநகர் நீணாக்கேணி விவகாரம்.. சமரச தீர்வு எட்டப்பட்டது.

-தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி -

திருகோணமலை தோப்பூர் செல்வநகர் நீணாக்கேணி பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான குடியிருப்பு மற்றும் விவசாய காணிகளுக்குல் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை இரவு வேலைகளில் அத்து மீறி உள் நுழைந்த பௌத்த தேரர்கள் தலைமையிலான குழுவினர் குடியிருப்பு வீடுகளை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பிலும் காணிப்பிரச்சினை தொடர்பிலும் இன்று புதன் கிழமை கிழக்கு மாகாண ஆளுனர் தலைமையில் ஆளுனர் அலுவலகத்தில் இருதரப்பினருக்குமிடையிலான சமரச கலந்துரையாடல் இடம் பெற்றது.

இந்த பிரச்சினையினை தீர்ப்பதற்காக வேண்டி மாவட்ட செயலாளர், சேருவில பிரதேச செயலாளர் ஆகியோரின் தலைமையில் பிரச்சினைக்குரிய இரு தரப்பிலும் இருந்து குழு ஒன்றினை அமைத்து இவ் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமெனவும் பிரச்சினைக்குரிய காணிப்பகுதியில் இரு தரப்பினரும் தீர்வு கிடைக்கும் வரை பயிர்ச் செய்கையிலோ கட்டிடம் அமைக்கும் நடவடிக்கையிலோ ஈடுபடக் கூடாதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இரண்டு வாரத்திற்குல் இந்த பிரச்சினையினை தீர்த்து வைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படுமெனவும் அது வரையில் இரு தரப்பினருக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் சமூகத் தலைவர்கள் செயற்பட வேண்டுமெனவும் பேசப்பட்டது.

இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, மாவட்ட செயலாளர் புஷ்பகுமார, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மகரூப், மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.எனினும் கலந்துரையாடல் இடம் பெற்ற இடத்தில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை.

நேற்றைய தோப்பூர் செல்வநகர் நீணாக்கேணி விவகாரம்.. சமரச தீர்வு எட்டப்பட்டது. நேற்றைய தோப்பூர் செல்வநகர் நீணாக்கேணி விவகாரம்.. சமரச தீர்வு எட்டப்பட்டது. Reviewed by Madawala News on 5/17/2017 03:41:00 PM Rating: 5