Kidny

Kidny

இலங்கையில் இடம்பெற்றுவரும் இனவாத தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்.


இலங்­கையில் இடம்பெற்றுவரும் இனவாத செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
 
அத்துடன், இன­வா­தத்தை தூண்டும் வகையில் செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் சட்ட நட­வ­டிக்கை எடுக்­க வேண்டும் என ஐக்­கிய நாடுகள் சபை வலி­யு­றுத்­தி­யுள்­ளது. இது தொடர்பில் ஐக்­கிய நாடு­க­ளுக்­கான இலங்­கையின் இணைப்­பாளர் உனா மெக்­கௌலி அறிக்­கை­யொன்றை வெ ளியிட்­டுள்ளார்.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்­கையில் கடந்த வாரம் வெசாக் பண்­டிகை கொண்­டா­டப்­பட்ட நிலையில் இந்த வாரம் கௌதம புத்­தரின் போத­னைகள் மூழ்­க­டிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த நிலையில் இலங்கை மக்கள், இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
இலங்கையில் இடம்பெற்றுவரும் இனவாத தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம். இலங்கையில் இடம்பெற்றுவரும் இனவாத தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம். Reviewed by Madawala News on 5/24/2017 11:28:00 AM Rating: 5