Kidny

Kidny

ஏகாதிபத்தியமாகிறது ரஷ்யா – பனிப்போர் துவக்கம்.



Muja ashraff 
உலக மேலாதிக்கத்துக்கான வெறித்தனமான நடவடிக்கைகளில் இரண்டாம் உலகப் போர் முடிந்த தருணத்திலிருந்தே அமெரிக்கா ஈடுபட்டிருந்த இதே காலகட்டத்தில், அதனை எதிர்த்து நின்ற சோசலிச முகாமில் தோன்றிய பாரிய பின்னடைவு மிகவும் முக்கியமானது.

ஸ்டாலின் மறைவிற்குப் பின் அரசு முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பிய சோவியத் மெல்ல மெல்ல தானே ஒரு ஏகாதிபத்தியமாக வளரத் தொடங்கியது. சீனாவின் தலைமையிலான சோசலிச முகாம் என்பது ஒப்பளவில் சிறியதாகவே இருந்தது. ரசிய சமூக ஏகாதிபத்தியமோ உலக மேலாதிக்கத்திற்கு அமெரிக்காவுடன் போட்டிபோடும் இன்னொரு வல்லரசானது.

உலக வங்கி, ஐ.எம்.எஃப் ஆகியவற்றுக்கு இணையாக, டாலருக்குப் பதில் ரூபிளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வர்த்தக வலைப்பின்னல்கள், இராணுவக் கூட்டு ஒப்பந்தங்கள் என்று தனது தலைமையில் இன்னொரு முகாமை ரசியா உருவாக்கியது. அமெரிக்க எதிர்ப்பு தேசிய விடுதலை இயக்கங்களை ஆதரித்து அவற்றைத் தனது முகாமுக்குள் இழுத்தது. ஆயுதப் போட்டியில் குறிப்பாக அணுஆயுதப் போட்டியில் இறங்கி பொருளாதாரத்தை இராணுவ மயமாக்கியது. அமெரிக்காவுக்குப் போட்டியாக உலகெங்கும் இராணுவத் தளங்களை நிறுவியது.

70-களின் அமெரிக்க எதிர்ப்புக் கிளர்ச்சிகளும், அமெரிக்காவின் தோல்விகளும் ரசிய வல்லரசுக்குத் தெம்பூட்டியபோதும், பொருளாதார மேலாதிக்கத்தில் அமெரிக்காவுடன் போட்டி போடவியலாத பலவீனம், இராணுவச் செலவினங்கள் தோற்றுவித்த சுமை ஆகியவற்றுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தது ரசியா.

ரசிய மேலாண்மையின் நிருபணமாகவும் அதன் சரிவைத் துரிதப்படுத்தும் துவக்கமாகவும் அமைந்தது 1979-இல் ரசியா நடத்திய ஆப்கான் ஆக்கிரமிப்பு. அமெரிக்காவுக்கோ இந்த ரசிய ஆக்கிரமிப்பு என்பது வியத்நாம், ஈரான், நிகராகுவா ஆகியவற்றின் வரிசையில் ஒரு கூடுதல் தலைகுனிவானது.
ஏகாதிபத்தியமாகிறது ரஷ்யா – பனிப்போர் துவக்கம். ஏகாதிபத்தியமாகிறது ரஷ்யா – பனிப்போர் துவக்கம். Reviewed by Madawala News on 5/14/2017 10:06:00 AM Rating: 5