Ad Space avaiable

வீடியோ கான்ஃபரன்ஸிங் முறைப்படி நடந்த முஹம்மது ஆபித் திருமணம்..


தகவல் தொழில்நுட்பத்தின் உச்சகட்ட பரிணாம வளர்ச்சியின் அடையாளமாக, திருமணத்திற்கு வர இயலாமற்போன மாப்பிள்ளைக்கும் மணமகளுக்கும் வீடியோ கான்ஃபரன்ஸிங் முறைப்படி திருமணம் நடந்துள்ளது.

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முஹம்மது ஆபித். இவர் சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார்.

இவருக்கும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், தவிர்க்க முடியாத சூழ்நிலையால் திருமண நாளான கடந்த 5 ஆம் திகதி மணமகன் முஹம்மது ஆபித் இந்தியாவிற்கு செல்ல இயலாமற்போனது. இதனால், பெண் வீட்டார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை குறித்த நேரத்தில் நவீனகால வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் நடத்திவிட மணமகனின் தந்தையான ரேஹான் தீர்மானித்தார்.

இதையடுத்து, மணக்கோலத்தில் முஹம்மது ஆபித் சவுதி அரேபியாவில் தனது நண்பர்கள் புடைசூழ அமர்ந்திருக்கும் காட்சியுடன் அங்குள்ள மார்க்க அறிஞர்கள் முன்னிலையில் இந்த திருமணத்திற்கு அவரது சம்மதம் பெறப்பட்ட காட்சியும் ஷாம்லி மாவட்டத்தில் இருக்கும் மணமகள் வீட்டில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டது.

அதேவேளை, இன்னொரு கெமரா மூலம் மணமகள் சம்மதம் தெரிவிக்கும் காட்சி ஒளிபரப்பானது. இந்த திருமண விழாவிற்கு வந்திருந்த நண்பர்களும், இந்த ‘ஹைடெக்’ திருமணத்தைக் கண்டு வியந்ததுடன், மணமக்களை மனம் குளிர வாழ்த்தினர்.
வீடியோ கான்ஃபரன்ஸிங் முறைப்படி நடந்த முஹம்மது ஆபித் திருமணம்.. வீடியோ கான்ஃபரன்ஸிங் முறைப்படி நடந்த முஹம்மது ஆபித்  திருமணம்.. Reviewed by Madawala News on 5/09/2017 07:32:00 PM Rating: 5