Ad Space avaiable

அப்டேட்... வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த கட்டிடம் முஸ்லிம் தனவந்தர் ஒருவருக்கு சொந்தமானது .



கொழும்பு-06, வெள்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகிலுள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்று இடிந்து விழுந்ததில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை, 23ஆக அதிகரித்துள்ளதாக, களுபோவில மற்றும்  கொழும்பு தேசிய வைத்தியசாலைகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் இருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக, அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றதுடன் அனர்த்தத்தில் மேலும் பலர் சிக்கியுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட கட்டிடம் திருமண வரவேற்பு மண்டபம் ஒன்றின் புதிதாக கட்டி இணைக்கபடும் பகுதி கட்டிடம் என்றும் தர்காநகர் பதாஹ் ஹாஜியாரின் மகன் ஷாஜகான் என்பவருக்கு சொந்தமானது எனவும் நிர்மாணப்பணிகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இவ்வனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கபடுகிறது.
அப்டேட்... வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த கட்டிடம் முஸ்லிம் தனவந்தர் ஒருவருக்கு சொந்தமானது . அப்டேட்... வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த கட்டிடம் முஸ்லிம் தனவந்தர் ஒருவருக்கு சொந்தமானது . Reviewed by Madawala News on 5/18/2017 01:34:00 PM Rating: 5