tg travels

வௌ்ளவத்தை அனர்த்தம்.. ஒருவர் சற்றுமுன்னர் உயிரிழந்தார்.


கொழும்பு-06, வௌ்ளவத்தை சவோய் திரையரங்கத்துக்கு அருகிலுள்ள கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற கட்டிடமொன்று, இன்று (18) முற்பகல் 11 மணியளவில் சரிந்து விழுந்ததில், 27 பேர் காயங்களுக்கு உள்ளானது அறிந்ததே...

இந்நிலையில் இவ்வனர்த்தத்தில்  படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.,

அதேவேளை,  கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்குண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், தேடுதல் பணிகளை  முப்படையினரும், பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் கடும் மழைக்கு மத்தியிலும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். இராணுவ அதிகாரிகள் 10 பேர், இராணுவ சிப்பாய்கள் 100 பேர், விமானப்படை அதிகாரிகள் மூவர் உள்ளிட்ட விமானப்படையினர் 30 பேர் குறித்த மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார்.
வௌ்ளவத்தை அனர்த்தம்.. ஒருவர் சற்றுமுன்னர் உயிரிழந்தார். வௌ்ளவத்தை அனர்த்தம்.. ஒருவர் சற்றுமுன்னர் உயிரிழந்தார். Reviewed by Madawala News on 5/18/2017 09:15:00 PM Rating: 5