Ad Space avaiable

யமீன் ரஷீத்தை மாலைதீவில் படுகொலை செய்தாது யார்? கொழும்பில் ஆர்ப்பாட்டம்.


மாலைதீவில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் யமீன் ரஷீட்டிற்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள இலங்கைக்கான மாலைதீவு தூதரகம் முன்பாக நீதி விசாரணை கோரி குறித்த ஆர்ப்பாட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது மக்கள், சந்தியா எக்நெலிகொட உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மத அடிப்படைவாதம் மற்றும் மாலைதீவின் அரசாங்கம் தொடர்பில் குறித்த இளைஞர் விமர்சனங்களை வெளியிட்டு வந்துள்ளார்.


இந்த நிலையிலேயே வலைப்பதிவாளரான யமீன் ரஷீட் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

யமீனை கொன்றது யார்? இந்த கொலைக்கு நீதி வேண்டும் என பதாதைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யமீன் ரஷீத்தை மாலைதீவில் படுகொலை செய்தாது யார்? கொழும்பில் ஆர்ப்பாட்டம். யமீன் ரஷீத்தை  மாலைதீவில் படுகொலை செய்தாது யார்?  கொழும்பில் ஆர்ப்பாட்டம். Reviewed by Madawala News on 5/08/2017 05:47:00 PM Rating: 5